தருணம் ....

வாடிய மலரில் நீர் ஊற்றும் தருணம் அழுத குழந்தைக்கு பால் குடிக்கும்  தருணம் சுடும் வெயிலில் நடந்தவரைகுளிர் அறையில் இருத்திய தருணம் நாவறண்டு தவித்தபோது ஒரு வாய் தண்ணீர் கிடைத்த  தருணம் பருந்து தூக்கி சென்ற குஞ்சை தாய் கோழி பெற்ற தருணம் மாரடைப்பால் மூர்ச்சையாகி அவசர சிகிச்சையால் உயிர் பெற்ற தருணம் இந்த தருணங்களை போலல்லவா அன்பே  என்னை பிரிந்த நீ கூடிய தருணம் . ~அன்புடன் உங்கள் யசோதா காந்த்...