வயோதிகம் .....

வாலிபத்தின் கடைசி நாட்களாய் கடந்தவைகளை திருப்பிப்பார்க்கும் தருணமாய் ஊன்றுகோலே மூன்றாம் காலாய் பகைவனை கூட நண்பன் ஆக்கும் பக்குவமாய் மனம் தெளிந்த நீரோடையாய் நல்லவைகள் மட்டும் நாடும் குணமாய் ஆசைகளை துறந்து ஞானியாய் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடாய் அன்பு மட்டுமே தாரக மந்திரமாய் ஆதரவை நாடும் அப்பாவியாய் இறைவனடி சேரும் நாளை எண்ணி தவிப்பாய் மழலை மனதின் மொத்த உருவமாய் வயோதிகம் ..... ~ அன்புடன் யசோதா காந்த்...