
கடல் அலையே
நீயும் எனை போல் வழிமேல் விழிவைத்து
யார் வரவை நோக்கி காத்திருக்கிறாயோ ?
என் உள்ளின் தவிப்பை
உன்னுள்ளும் காண்கிறேனே
சலிப்பின்றி ஓயாமல்
வந்து வந்து செல்கிறாயே
திரும்பி செல்லும் உன் முகத்திலோ
மீண்டும் வரும் புறப்பாடே..
விட்டு சென்ற காதலன்
மனம் கனிந்து வருவான் என காத்துருகின்றயோ ?
என் கண்ணீர் உப்பு சுவை சிறிதளவே
நீ வடித்த கண்ணீரோ ..
உப்பாகவே மாறுகிறதே !
நம் இருவரின் தேடலின் முடிவேன்றோ ?
போய் சேரா ஊர்தேடி பயணமோ
நீயும் நானும் ..................???????????
~அன்புடன் யசோதா...