
வார்த்தைகளை தொகுத்து வரிகளாக்கி கவிதைகள் புனைந்து
கவிஞன் ஆகும் ஆசை எனக்கு
முற்றத்து மாமரம் வந்துபோகும்
பச்சை கிளி ஒன்று
செந்தமிழ் கவி கேட்க ஜன்னலோரம் வந்தமர்ந்தது
பிழைகள் இருப்பின் சொல்லித்தருவேன் என நான் வரைந்த வரிகளை
வாசிக்க சொன்னது
கிளிக்கென்ன தெரியும்இலக்கணமும் இலக்கியமும் என மனதில் எள்ளி நகைத்து சொல்ல தொடங்கினேன்
வார்த்தைகளின் பஞ்சத்தால்
ஒரேபோலான வரிகளே என் கவிதையில்
கோபம் கொண்ட பச்சை கிளியோ
சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை நீ என சொல்லி
சிறகடித்து பறந்து சென்றது
மீண்டும் மீண்டும்
திருத்தமுயன்றும் ...