Showing posts with label கவிதை ...அறிவுரை ..பெரியோர் ..பலன். Show all posts
Showing posts with label கவிதை ...அறிவுரை ..பெரியோர் ..பலன். Show all posts

அறிவுரை ...



 
மூத்தோர் சொல்கேட்ப்போம்
முக்கனிகளாய் இனிப்போம்
முழுமையாய் பயனடைவோம்

ஆன்றோர்களின் அறிவுரைகளோ
அறிவில் சிறக்க செய்திடுமே
ஆக்கம் பலபல  உருவாகுமே !

அறியா  வினாக்களுக்கெல்லாம்
பெரியோர்களன்றோ அகராதியாம்

இயற்கை வைத்தியங்களும்
இயற்கை  சீற்றங்களையும்
வியக்கும் வண்ணம் எடுத்துரைப்பாரன்றோ  !

வாழ்கையின் ரகசியங்களையும்
வகை அறிந்து உணர்த்திடுவாரன்றோ !
முதியோர் இல்லங்கள் ஒழியட்டும் 
அவர் நம் அன்பு பிணைப்பில் வாழட்டும்

முதியோர்களை போற்றுவோம்
முரண்பாடுகள் இன்றி வாழ்ந்திடுவோம்

~அன்புடன் யசோதா காந்த் ~