பிரிவு ...........

நாள் நட்சத்திரம் ஜாதக பொருத்தம் பார்த்தும் வேதங்கள் மந்திரம் ஓதியும் நவீனமுறையில்  பதிவு செய்தும் சேர்ந்த திருமண பந்தங்களே .. காலம் சில சென்ற பின் பிரிவென்று வருகிறதே இறைவன் படைத்த உயிர்கள் அனைத்தும் இணைந்து வாழதானே .. ஐயிந்தறிவுகளே ஆனந்தமாய் கூடி குலாவுகின்றன நன்றாய் ஆறறிவு உள்ள நாமோ விட்டு கொடுக்க மறுத்தும் அன்பு செய்ய மறந்தும் அவதி படுவதேனோ ??   மனங்களை ரணங்களாக்கி விவாதம் பொதிந்த விவாகரத்துக்களே பிரிந்த பின்போ துயரத்திலே ஏனோ இந்த நிலைமை வாழ்க்கை ஒருமுறையல்லவா  வாழ்ந்திடுவோம் இன்பமுற...