மார்கழி பனி .

அதிகாலை இங்கு வந்துபவள முத்துக்களை விதைத்தது யார்?அள்ளி பொருக்க மனம் ஆசை படுகிறதேதுள்ளி நடக்கும் பாதங்களில்சின்னதாய் குளிர் சுகம் பரவுகிறதே ...புல்பூண்டுகளும் ..செடிகொடிகளும்தலை குளித்து முடித்த பின்தலை துவட்ட மறந்தனவோ?கதிரவன் வருவான் ..தலை காய்த்து விடுவான் எனவானம் நோக்கி ...நேரம் பார்த்து ...காத்திருக்கின்றனவோ?நானும் கண் மூடி காத்திருக்கிறேன்கதிரவனின் கணைகளாய்எனை அணைக்கும் காதலனைஎதிர் நோக்கி ...~ அன்புடன் யசோதா காந்த் ~...