ஒட்டாமல் உறவாடி ..

ஜென்ம ஜென்மமாய் உன்னோடு நான் வாழ்கிறேன் உன்னை ஒட்டி கொண்டும் உன்னை உரசி கொண்டும் ஆனால்  நீயோ ... என்னோடு ... பட்டும் படாமலும் என்னை தொட்டும் தொடாமலும் என்னை ஏன் தள்ளி வைத்து பார்க்கிறாய் அடுத்த ஜென்மத்திலாவது உன்னோடு நானும் என்னோடு நீயும் ஒன்றாக வேண்டும் என் அன்பே ...(தாமரை இலை....தண்ணீரை பார்த்து)........ ~ உங்கள் யசோதா...

பொம்மை

குழந்தைக்கு...குழந்தையாய் ஆனதுநான் வாங்கி தந்த பொம்மை எனக்குள் கேள்வி...தாய்மை எங்கிருந்து உருவாகிறது விடை தெரியவில்லை ... வேடிக்கை பார்த்தேன் பொம்மைக்கு சோறுட்டும் குழந்தையை                        ~ அன்புடன்...யசோதா ~...

நெற்பயிரும் ......மழையும்..

காத்து கிடந்தேன் காய்ந்து கிடந்தேன்,, நலிந்து போனேன் மெலிந்தும் போனேன் என் மேல் நீ விழுந்தாய் நிமிர்ந்து நின்றேன் காய்த்து குலுங்கினேன் நீ இன்றிஎனக்கேது வாழ்வு ..... என் மழையே ...                       ~ உங்கள் யசோதா...