பார்வை....

உன் பார்வையின் அர்த்த்தங்களை என்னவென்று சொல்வேன் ..... அழகான ஆழமான பார்வை ஆயிரம் கதைகள் சொல்லும் அற்புத பார்வை அன்பை அள்ளித்தரும் அமைதியின்பார்வை பசியை மறக்க செய்யும்தாய்மையின் பார்வை பிணி கூட பறந்தோடும்ஆரோக்கியத்தின் பார்வை பெரியோர்களை பாசத்தால் அணை போடும் கருணையின்  பார்வை மழலைகளும்  மகிழும்  உன்  அள்ளி அணைக்கும்  பார்வை பகைவனையும் நண்பனாக்கும் நட்பின்பார்வை எதிரிக்கும் பயம் தரும் வீரத்தின்  பார்வை எனக்கு மட்டும் காந்தமானகாதல் பார்வை.... உந்தன் பார்வை !.. ~ அன்புடன் யசோதா...