ஈகோ

விட்டு கொடுக்கும் எண்ணம்   எள்ளளவும் இல்லையே என்னிடம் பிடிவாதம் ஒன்றே...தொடரும்  தொடர்கதையாய் .. பேசி தீர்க்கும் விஷயத்திற்கெல்லாம்  பேசாமல் இருந்து பெரிதாக்கி .. நான் தொலைத்த உறவுகள்  மீண்டும் கிடைக்குமோ ? கொஞ்சி மகிழ்ந்த , ஆறாம் வகுப்புதோழி  எனக்காய் அழுத . எட்டாம் வகுப்பு கமலா  எதையும் எனகாய்  செய்யும்  கல்லூரி நட்பு மீனா  இன்னும் எத்தனை எத்தனை  நடப்புக்களை நான் இழந்தேன்  பாழாய் போன ஈகோ வந்திராவிட்டால் .... இன்று இருப்பார்ள் என் அருகே என் உயிர் தோழிகள்...