எல்லாம் அழகே .........

மலைகளில் தெரியும் மந்தாரம் சிலைகளில் தெரியும் மௌனம் பேசும்போது விழும் வார்த்தைகள் பேசாத போது விழுங்கும் உணர்ச்சிகள் வளர்ந்து ஒளி வீசும் பிறை அழகு தேய்ந்து மறைந்த நிலவழகு பல் முளைக்கா மழலை சிரிப்பு பல் போன முதுமை நகைப்பு விழிகளில் காணும் காட்சிகள் மொழிகளில் காணும் இனிமைகள் வானுயர்ந்த நீண்ட மரங்கள் குறுகிய புல் பூண்டுகள் குளிர் நடுங்கும் பனி காலம் கோடை தரும் கொதிப்பு ஆறறிவு மனிதனும் ஐந்தறிவு ஜீவன்களும் இறைவன் படைப்பில் ...காணும் எல்லாம் அழகே ... ~ அன்புடன் உங்கள் யசோதா காந்த்...