Showing posts with label கண்ணே கனி அமுதே. Show all posts
Showing posts with label கண்ணே கனி அமுதே. Show all posts

கண்ணே கனி அமுதே

கண்ணே கனி அமுதே
**********************
முத்து முத்தாய் சிரிப்பழகு
கொத்து கொத்தாய் பூ இதழ் அழகு
தத்தி தத்தி துள்ளும் முயலாய்
நெஞ்சய் தட்டி தட்டி செல்கிறாய்

கட்டி கட்டி உனை அணைக்க
மனம் எட்டி எட்டி தவிக்கிறதே
நெட்ட நெடுநேரத்திலும்
உனை கிட்டகிடத்தி காண்கையில்
உள்ளம் கொள்ளை போகிறதே

எல்லா உறவின் முத்த்திற்க்கு எல்லை உண்டு
எல்லையில்லா முத்தமழை உனக்கல்லவோ
என்  கண்ணே கனி அமுதே

அன்புடன்

யசோதா காந்த்