பஞ்சம் பசி ...

மண்ணிற்கும் விலையுண்டே இந்த மனித உயிர்க்கு விலையுண்டா? குடல் காய்ந்து கருகவா குடிசையில் பிறந்தோம் ? மண்ணையும் தின்று பார்த்தோமே மறுபடியும் பசிக்கிறதே ... நாடு வளம் பெறுமோ தெரியவில்லையே ஆனால் எங்களின் சவக்குழிகள் கண்முன் தெரிகிறதே ... தசைகள் இன்றி தோலும்தான் சுருங்கி போனதே .. உடலெலும்புகளோ புறம்  ஆனதே .. முகம்வடிவிழந்து மனித உருவம் மறைகிறதே வேறேதோ வேற்றுகிரகவாசிபோலானோமே.. ~அன்புடன் யசோதா காந்த்...