தெய்வத்தாய்...

ஆசையாய்  பெற்றெடுத்தாள்அழகிய குழந்தை ஒன்றுகொஞ்சி மகிழ்ந்தினர் குடும்பத்தினர்குழந்தையின் வளர்ச்சியிலோமாற்றங்கள் ஒன்றுமில்லை நாட்கள் நகர நகர  மெல்ல புரிந்ததுமனவளர்ச்சி இல்லா குழந்தை என்றுமருத்துவர் கூறினார்மற்றுமொரு யோசனைநிறைவாய் மற்றொன்றுஆரோக்கியத்துடன்  பெறலாமே  என்று தீர்க்கமாய் மறுத்தாள்பிள்ளையை அணைத்துக்கொண்டுஇன்னுமொன்று பெற்றால்இதை கவனிக்க தவறுவோமோ  என்று… இன்பமோ துன்பமோஇக்குழந்தையே போதுமென்றுஇறைவனிடம் மன்றாடினாள்   என் பிள்ளைக்கு அறிவையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பாயா என்று !...