
என் பெண்மையின் அர்த்தம் தெரிந்த நேரம்
அனைவரும் என்னை பாதுகாத்த நேரம்
கவலை கண்ணீர் நின்று போன நேரம்
ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்த நேரம்
குமட்டலையும் வாந்தியை வரவேற்ற நேரம்
ஆசைப்பட்ட உணவுகளை வெறுத்த நேரம்
போகுமிடமெல்லாம் பெருமை சேர்த்த நேரம்
கருவின் துடிப்பை உணர்ந்துமகிழ்ந்த நேரம் ...
என்னவென்று சொல்வேன் ?
தாய்மையின் இனிய பொழுதுகளை ...
~அன்புடன் யசோதா காந்த்...