
அம்மா உன்னை பார்க்க ஆசை
காதலின் வேகத்தில்உன்னை மறந்தேனே
நானே தாயானபோதோ தவறுகளை உணர்ந்தேனே
என்னை விழிக்குள் வைத்தல்லவா நீ வளர்த்தாய்
எனக்கு பிடித்த உணவுகளையல்லவாபார்த்து பார்த்து சமைத்தாய்
ஒரு நிமிடம் உன்னை மறந்து
என்னவர் பின் நடந்தேனே
உன்னை பிரிந்த பின்னும் ஒவ்வொரு நொடியும்
என் நினைவே நீயானாயே
உந்தன் வலியை எந்தன்
மகபேறு தன்னில் உணர்ந்தேனே
மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா
நீ வேண்டும் அம்மா மீண்டும் எனக்கு
நான் குழந்தையாய் மாறி
உன் புடவை தலைப்பால் முகம் மறைத்து விளையாட
நீ தலை தடவ உன்...