வானம் ....

நீ எங்கள் பூமி வீட்டின் கூரையல்லவா உலக நாடுகளை இணைக்கும் பாலமல்லவா இயற்கை தனை அள்ளி தரும் வாசலல்லவா இரவு பகலை உணர்த்தும் கடிக்காரமல்லவா பறவைகளின் விளையாட்டு மைதானமல்லவா உனை பாடாத கவிஞனும் உண்டோ வானவில்லில் வர்ணம் காட்டி வசியம் செய்யும் வல்லபனே இரவில் உன் அழகை காண இறைவனும் இறங்கி வருவானே ... அழகை அள்ளி தெளித்து நட்சத்திர கோலமிட்டு திருஷ்டி படாமலிருக்க நிலவை பொட்டாக்கி... ஒ வானமே உன்னை என்னவென்று வர்ணிப்பேன் ~யசோதா காந்த்...

வாடகை வீடுகள் ......

சரியோ ?தவறோ?தெரியவில்லை மனதின் வலிகளை மறைக்கவில்லை  நல்லதும் கண்டேனே தீயதும் கண்டேனே விவரங்கள் அறிந்த நாள் முதலாய்  சொந்தமென்று சொல்ல ஒரு வீடு இல்லை அவ்வப்போது சொந்தமாய் வாடகை வீடுகள்தானே... மாறி மாறி குடி கொண்டோம் வீடுகளை மட்டுமல்ல கல்விகூடங்களையும்தானே  புது புது மனிதர்கள் அறிமுகமாய் நண்பர்கள் கூட்டம் தாராளமாய்..  தடைகளோ எங்களுக்கு ... வாழும் வாழ்கையிலும் வசிக்கும் வீடுகளிலும்... சுவரில் ஆணி அடிக்க தடை பத்து மணிக்கு மேல் விளக்கு எரிக்க தடை  உரக்க பேசி சிரிக்க தடை சொந்த பந்தங்கள்...