10/03/2011 09:21:00 PM
|
by யசோதா காந்த்

விவசாயி வீட்டிலோ
இறைவனுக்கு படையலிட்டும்
நேர்ச்சைகள் பல நேர்ந்தும்
வேண்டினான் மழை பொழிய .....
வழியோரத்திலோ
நாளிதழ்களை படுக்கையாக்கி
கிழிந்த கோணிப்பைகளை
போர்வையாக்கி
உறங்க காத்திருக்கும் ஏழையோ
இறைவனை வேண்டினான்
மழை பெய்யக்கூடாதென்று....
இறைவனுக்கும் குழப்பம்
.
~ அன்புடன் யசோதா ...
10/03/2011 12:23:00 PM
|
by யசோதா காந்த்

வங்கியில் பணமெடுத்து
வரும் வழியில்
எதேச்சையாய்
ஒவ்வொரு பணத்தினையும்
முகர்ந்து பார்த்தேன் ..
ஒன்றிலுமே வாசனை இல்லை ..
வங்கியின் வாசல் காணாத
அன்னை தரும் பணத்தில்
வாசம் மட்டும் வசமாக குடி இருந்தது ..
மல்லி ஜீரக கடுகு டப்பாக்கள் தான்
அன்னை பணத்திற்கு வங்கியாய் இருந்தது
அவள் கைகளில் புழங்கிய பணத்திற்கும்
வாசனையை விதவிதமான வாரி தந்தது ..
இன்று என் கைகளிலோ
வாசனை இல்லா
சலவைத்தாள்களாக பணம் ..
~ அன்புடன் யசோதா காந்த்...