
இரவோ பகலோ
எப்பொழுதும் பரபரப்பாய்
வருவோரும் போவோரும்
பல்லாயிர கணக்காய்
வரவேற்ப்போரும் வழியனுப்புவோரும்
வந்து வந்து செல்வார்
சிரிப்பொலிகளும் அழும் சத்தங்களும்
அடிக்கடி கேட்கும்
பேரம் பேசுவோரும் பாரம் சுமப்போரும் கடமைகளில் கருத்தாய்
நாங்கள் மட்டும் நிலையாய்
வாழ்த்தி கொண்டும் வணங்கி கொண்டும்
(ரயில் நிலையங்களும் ..பஸ் நிலையங்களும் )
~ அன்புடன் யசோதா காந்த்...