8/16/2011 12:46:00 PM
|
by யசோதா காந்த்

என் கண்களில் நீ
என் நெஞ்சினுள் நீ
என் உணர்வுகளில் நீ
என் உயிரினில் நீ
என் உடல் பொருள் ஆவி நீ
இன்று நீ இல்லாத என் நிலை
கண்கள் இரண்டும் பிடிங்கியதுபோல்
நெஞ்சை கசக்கி பிழிந்ததுபோல்
உணர்வுகளை கொன்று போட்டது போல்
உயிரை என்னிடம் இருந்து பறித்து கொண்டது போல்
வழி அறியாது
நிலை குலைந்து
என்னை நினைக்காமல் நீயும்
உன்னை மறக்க முடியாமல் நானும்
சாகாமல் உயிரற்றவளாய் ....
~ அன்புடன் யசோதா காந்த்...
8/16/2011 12:37:00 PM
|
by யசோதா காந்த்

தினமும் இரவுகளில்
இன்ப கனவுகளில்
அழகாய் வருவாள் பெண்ணொருத்தி
வண்ண ஆடைகள் உடுத்தி
செல்லமாய் கதை சொல்வாள் காதோரத்தில்
அவள் குரலோ ராகமாய்
கிளிபேச்சின் கொஞ்சலாய்
என் மனதிலும்
நாத ஒலியும்..மிருதங்க தாள ஒலியும்
அவளின் ராகமும்
என் தாளமும் சங்கீதமாய்
ஆடலும் பாடலும் விடியும் வரை
விடிந்த பொழுதோ
எல்லாம் மாயமாய்
எனினும் காத்திருப்பேன்
இனிய இரவுகளுக்காய்
என்னவள் வரும் கனவுகளுக்காய் .....
~ அன்புடன் யசோதா காந்த்...
8/16/2011 12:33:00 PM
|
by யசோதா காந்த்

பூவை விட மென்மை
பாலை விட வெண்மை
நீரை விட தூய்மை
சொற்களில் இனிமை
எல்லாவற்றிலும் உண்மை
கண்களில் கருணை
அன்பு மட்டுமே கொள்கை
அனைத்தையும் அள்ளி தரும் தன்மை
அவளால் எங்களுக்கு மேன்மை
அவளை பற்றி பேசுவதோ பெருமை
அவள்தான் தாய்மை
ஆசிதரும் அன்னை ....
~ அன்புடன் யசோதா காந்த்...