விடியாத கனவு .......

கண் மூடி கிடந்தேன்  கண்டேன் ஒரு புது உலகம்  ஜொலிக்கும் ஒரு பெரும் நகரம்  அங்கே ஜாதி இல்லை  ஏற்ற தாழ்வு இல்லை  ஆட்டி படைக்கும் அதிகார வர்க்கம் இல்லை  அங்கே எல்லோரும் மன்னர்கள்  மதிப்புமிக்க மனிதர்களாக  போட்டி பொறாமை இல்லை ... அனைவருக்கும் ஒரே உணவு  ஒரே ஆடை  ஒரே ஊதியம்  பெண்களெல்லாம் தேவதைகளாக  குழந்தைகளோ தேவகுமரர்களாக  ஊரெங்கும் தோரணம்  காணுமிடமெல்லாம் விழாக்கோலம்  வானத்திற்கும் பூமிக்கும்  வாசல்படியும் அழகிய ஏணிபடியும் கண்திறக்க மனமில்லை.....