
மூத்தோர் சொல்கேட்ப்போம்
முக்கனிகளாய் இனிப்போம்
முழுமையாய் பயனடைவோம்
ஆன்றோர்களின் அறிவுரைகளோ
அறிவில் சிறக்க செய்திடுமே
ஆக்கம் பலபல உருவாகுமே !
அறியா வினாக்களுக்கெல்லாம்
பெரியோர்களன்றோ அகராதியாம்
இயற்கை வைத்தியங்களும்
இயற்கை சீற்றங்களையும்
வியக்கும் வண்ணம் எடுத்துரைப்பாரன்றோ !
வாழ்கையின் ரகசியங்களையும்
வகை அறிந்து உணர்த்திடுவாரன்றோ !முதியோர் இல்லங்கள் ஒழியட்டும் அவர் நம் அன்பு பிணைப்பில் வாழட்டும்
முதியோர்களை போற்றுவோம்
முரண்பாடுகள் இன்றி வாழ்ந்திடுவோம்
~அன்புடன் யசோதா...