
எல்லை இல்லா வனத்தில்
உயரே உயரே பறக்கிறேன்
கள்ளமில்லா சிரிப்பினை
கனவினிலும் கூட சிந்துகிறேன்
அன்பு எனும் அடைமொழியால்
அணையா விளக்காய் எரிகிறேன்
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி
அன்பின் நட்புக்களினால் மிளிர்கிறேன்
இறைவன் அருளிய நட்பு உறவுகளை
கற்பென காத்து போற்றிடுவேன்
~அன்புடன் யசோதா காந்த்...