பிடிவாதம் :

பிடிவாதம் ***********: தெளிந்த பாலை குடிக்க சொன்னாலும் அசைவு ஒன்றும் இல்லை  பதில் சொல்லுங்கள் என ஆயிரம் முறை கேட்டாலும் சட்டை செய்வதில்லை .. கதறி அழுது அடம் பிடித்தாலும்  கண்டுகொள்வதே இல்லை   பற்றி எரிந்து தேகமெங்கும் தீ படர்ந்தாலும்  வேதனையோ விசும்பலோ வெளிப்படுத்துவதே இல்லை முடிவு செய்தால் அதிலிருந்து . பின் மாறாத பிடிவாதக்காரர்கள் தான் இவர்கள் .மரணம் எனும் ஏட்டில்  கையெழுத்து இட்ட இறந்தவர்கள் ... ~யசோதா காந்த்...