Showing posts with label கவிதை .. இளைய பாரதம் .. இந்தியா ... Show all posts
Showing posts with label கவிதை .. இளைய பாரதம் .. இந்தியா ... Show all posts

இளைய பாரதம்




வானம் ஒன்றும் தூரமில்லை
எங்கள் நெஞ்சில் சோகமில்லை
சிறு புல்லும் நாங்கள் தொட்டால்
கொடும் பெரும் ஆயுதமாகும்..

நாளை உலகம் எங்கள் மூலம்
நல்ல காலம் காண செய்வோம்
புரட்சி செய்வோம் எங்கு எதிலும்
எதிர்த்து நிற்போம் குற்றங்களை

தாய் நாட்டைக்காப்போம்
தைரியம் கொண்டு
தீவிரவாதம் ஒழிப்போம்
இது தாய் மீது ஆணை...

இந்தியன் அனைவரும் உடன்பிறப்பென்று
உறக்கத்தில் கூட உணர்ந்து இருப்போம்
புதுமை செய்யும் இளைஞர்கள் நாங்கள்
புதிய இந்தியா எங்கள் கைகளில்...
 
வந்தே மாதரம் !
~ அன்புடன் யசோதா காந்த் ~