8/11/2011 11:13:00 AM
|
by யசோதா காந்த்
கை பாத்து குறி சொல்லும்
நரிக்குறத்தி பொண்ணு வந்தா
எல்லாருக்கும் கை பாத்து
கணக்கா குறி சொன்னா
வேலப்பன் பொண்ணு முனியம்மாக்கு
கை காட்டி எதிர்காலம் கேட்டு குறி பாக்க ஆசை ..
முந்தானைல முடிச்சு வச்ச
சில்லறைய எடுத்து குறி கேக்க போனா
கை நீட்ட சொன்னா
குறி பாக்கும் குறத்தி
பாவிமக கையில கைரேகை இல்ல
நாலஞ்சு வீட்டு பத்து பாத்திரம் தேச்சு
கைரேகை எல்லாம் காணாம ...போச்சு
~ அன்புடன் யசோதா ~
8/11/2011 10:56:00 AM
|
by யசோதா காந்த்
இந்த பட்டு பாவாடை
எனக்குத்தானே
என் கேட்ட மகளிடம் ....
எப்படி சொல்வது ...
இது வெள்ளாவிக்கு வந்த
மேலதெரு மாமி வீட்டு
துணி என்று....
~ அன்புடன் யசோதா ~
8/11/2011 10:34:00 AM
|
by யசோதா காந்த்
கல்லாதவனையும்
கவிதை
சொல்ல சொல்லி மேதையாக்கும்..
கருணை இல்லாதவனையும்
கனிவாய் பேசவைக்கும்
இல்லாத ஒன்றை
இருப்பதாக காட்டும்
கண்களிலே கனவுகளையும்
நெஞ்சினிலே எதிர்பார்ப்புகளையும்
வைத்துகொண்டு
கண்மூடித்தனமாய் பறக்கவைக்கும்
புது உணர்வுக்கு பெயர்தான் காதலோ .........
~ அன்புடன் யசோதா ~
8/10/2011 04:44:00 PM
|
by யசோதா காந்த்
அன்பே
என் கண்களில்
ஏதோ கோளாறு என்று நினைகிறேன்
கண் மருத்துவரிடம் போக வேண்டும்
ஏன் தெரியுமா ?????
நான் காணும் யாவும்
கருப்பு வெள்ளையாய்
தெரிகிறது....ஆனால்
நீயும்...உன் நினைவுகளும் ..
நம்மை பற்றி ..
நான் காணும் கனவுகளும்
வண்ண வண்ண நிறங்களாய்
என் கண்களில் .....
~ அன்புடன் யசோதா ~
8/10/2011 04:37:00 PM
|
by யசோதா காந்த்
வீட்டுக்கு வாசல் படியும் திண்ணையும் அழகோ அழகு
ஆயிரம்நினைவுகளை சொல்லும் பழைய வீடும் முற்றமும்
எனக்கு மட்டுமல்ல அம்மாவுக்கும் தோழி வாசல் படியே
தலை வாரி விடும்போதும் ...
கீரை ஆய்ந்து அரிசியில் கல்பொறுக்கும்போதும்...
வேலைகள் முடிந்து பக்கத்துவீட்டு மாமியிடம் ஊர்கதைகள் பேசும் போதும் அப்பாவிற்க்காய் காத்து இருக்கும் போதும் ...
சண்டை குழப்பம் தீர சாய்ந்து உக்காரும்போதும் ...
மல்லிகை சூடி விளக்கேத்தும்போதும்....
வாசல்படிதானே ....அனைவருக்கும் தோழி ...
எனக்குமட்டுமா...
எல்லோருக்குமே ...வாசல்படியில் கதைகள் உண்டே ...
நாகரீகம் கூடிபோனதாலே
வாசற்படியும் திண்ணையும் இல்லா
அடுக்கு மாடியில் குடித்தனம்
கண்மூடி கற்பனையாய் இல்லாததை இருப்பதாக
கண்ணில் நிறுத்தி பார்க்கிறேன் ...நான்
எனில் நீங்களோ ?//??????????????????????
~அன்புடன் யசோதா காந்த்~
8/10/2011 04:27:00 PM
|
by யசோதா காந்த்
அழகிய கண்கள்
எடுப்பான நாசி
சிவந்த கன்னங்கள்
இதழ்களை வர்ணிக்கவோ வார்த்தைகள் இல்லை
இடை அது இல்லவே இல்லை
இப்படி அவளை வர்ணித்து கொண்டே
இருக்கலாம் ..
ஆண் பெண் இருபாலரும் உற்று நோக்கியும்
வெட்கம் இல்லை
அந்த துணிக்கடை பொம்மைக்கு (பெண்ணுக்கு) ...
~ அன்புடன் யசோதா ~
8/07/2011 10:04:00 AM
|
by யசோதா காந்த்
உடுத்தினால்
ஏழு வண்ணத்தில் தான்
ஆடை உடுத்துவேன் என்று
அடம்பிடித்தாள்
வானவில் மங்கை .....
~ அன்புடன் யசோதா ~
8/07/2011 09:59:00 AM
|
by யசோதா காந்த்
நானும் இருந்தேன் மௌனவிரதம்
சிலமணிநேரங்கள் ...
அப்பப்பா முடியவில்லை ...
அப்பொழுதுதான் ஊமையின் தவிப்பு புரிந்தது ....
இறைவா உன்னால் முடிந்தால்
அவர்களுக்கு பேசும் சக்தி கொடு ..
இந்த மானிட பிறப்பின் மகிமையை பேசி மகிழட்டும்....
~ அன்புடன் யசோதா ~
8/07/2011 09:52:00 AM
|
by யசோதா காந்த்
அன்பு பொய் சொல்வதில்லை
அன்பு பொறாமை கொள்வதில்லை
அன்பு எரிச்சல் அடைவதில்லை
அன்பு தீங்கு செய்வதில்லை
அன்பு சினம் கொள்வதில்லை
அன்பு பழி போடுவதில்லை
அன்பு பகைமை கொள்வதில்லை
அன்பு பாகு பாடு பார்ப்பதில்லை
அன்புக்கு உயர்வு தாழ்வு இல்லை
அன்புக்கு ஏழை பணக்காரன் இல்லை
அன்புக்கு ஜாதி மதம் இல்லை
அன்புக்கு மொழி வேறுபாடு இல்லை ..
~ அன்புடன் யசோதா .. ~
8/07/2011 09:45:00 AM
|
by யசோதா காந்த்
தாய் சுமந்தாள் எனை பத்து மாதம்
ஆனால் நான் நடை பயிலும் வரை
என்னை இடுப்பில் வைத்து சோறூட்டி
தோளில் போட்டு தலாட்டி
என்னை சிரிக்க வைத்து
என் காதோரத்தில் கதை சொல்லி
மகிழ்ந்த அவளும்
எனக்கு தாய் போலத்தான் ,,,,,என் அக்கா..........
~ அன்புடன் யசோதா ~
8/07/2011 09:19:00 AM
|
by யசோதா காந்த்
ஆணென்றும் பெண்ணென்றும்
ஆண்டுக்கொரு மகப்பேறு
அளவில்லா பூரிப்பும்
எல்லையில்லா ஆனந்தமும் ..
பிள்ளைகள் வளரும் அழகை
ஆயிரம் கண்கொண்டு கண்டு ரசித்தாள்
விளையாட்டு பொருட்களையோ
பொக்கிசமாய் பாதுகாத்தாள்..
சுவற்றில் குழந்தைகளின் கிறுக்கல்களை
சுண்ணாம்பு பூசாமல்..ஓவியமாக்கினாள்
பட்டம் பெற்றபோதும் ..பதவிகள் அடந்தபோதும்
பால் கொடுத்த முலைகளும் ..
கருவை வளர்த்த கருவறையும்
மகிழ்ந்து ...கொண்டாடியது ...
மலடியாகவே இருந்திருக்கலாமே என
மனம் கசந்தாள் ..
அடைக்கலமாய் முதியோர் இல்லத்தை
அடைந்த போது ....
~ அன்புடன் யசோதா ..~
8/03/2011 04:36:00 PM
|
by யசோதா காந்த்
ஜென்ம ஜென்மமாய்
உன்னோடு நான் வாழ்கிறேன்
உன்னை ஒட்டி கொண்டும்
உன்னை உரசி கொண்டும்
ஆனால் நீயோ ...
என்னோடு ...
பட்டும் படாமலும்
என்னை தொட்டும் தொடாமலும்
என்னை ஏன் தள்ளி வைத்து பார்க்கிறாய்
அடுத்த ஜென்மத்திலாவது
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
ஒன்றாக வேண்டும் என் அன்பே ...
(தாமரை இலை....தண்ணீரை பார்த்து)........
~ உங்கள் யசோதா ~
8/03/2011 04:28:00 PM
|
by யசோதா காந்த்
குழந்தைக்கு...
குழந்தையாய் ஆனது
நான் வாங்கி தந்த பொம்மை
எனக்குள் கேள்வி...
தாய்மை எங்கிருந்து உருவாகிறது
விடை தெரியவில்லை ...
வேடிக்கை பார்த்தேன்
பொம்மைக்கு
சோறுட்டும் குழந்தையை
~ அன்புடன்...யசோதா ~
8/03/2011 03:59:00 PM
|
by யசோதா காந்த்
காத்து கிடந்தேன்
காய்ந்து கிடந்தேன்,,
நலிந்து போனேன்
மெலிந்தும் போனேன்
என் மேல் நீ விழுந்தாய்
நிமிர்ந்து நின்றேன்
காய்த்து குலுங்கினேன்
நீ இன்றிஎனக்கேது வாழ்வு .....
என் மழையே ...
~ உங்கள் யசோதா ~