காயங்கள் ...



ஏனோ எனக்கு கனவுகள்
வருவதே இல்லை ...
உணர்வுகள் மங்கி போனதாலோ?
எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஆனதாலோ?
இயற்கையை ரசிக்க மறந்தேன்
நண்பனையும் எதிரியையும் ஒன்றாய் காண்கிறேன்
எதுவும் பிடிக்கவில்லை
என்னையும் எனக்கு பிடிக்கவில்லை
 கத்தியின்றி இரத்தமின்றி
காயங்கள் மட்டும் என்னுளே .....

~அன்புடன் யசோதா காந்த் ~

கடவுள் ...


உலக அதிசயம் எல்லாம் 
உன் முன்னே 
தூசியாய் ..

உன்னை கண்டபின்பும் 
கடவுளையும் தேடுவார் உண்டோ ?

மனிதனுக்கு மனிதம் 
உணர்த்துபவளே ..

அன்பென்ற சொல்லுக்கு அர்த்தமே ..
தாய்மை தளும்பும் 
அன்னையே நீ வாழ்க !!!

                         ~யசோதா காந்த் 

சந்தேகம் ...

















எப்படி அழிப்பேன்
என்னுள் ஆணி வேராய் சந்தேகம் 
பொய்யானதை மெய்யாக்கி
எனை நானே சிதைத்து
என்னில் அன்பு செய்வோரையும்
சுடும் சொல்லால் வதைத்து
கற்பனை குதிரையை
கண்மூடித்தனமாய்  ஓடவிட்டு

இல்லாதொன்றை இருப்பதாக்கி
இன்ப வாழ்க்கையில்
இன்னல்களை சொந்தமாக்கி
சின்னாபின்னாமாக்கும் இப்பிணி
குணமாகுமோ என்னிலிருந்து?
உயிராய் எனை நேசிக்கும் மனமும்
வெறுப்பாய் மாற செய்யுதே
மீளா குழிதனிலிருந்து
மீள்வேனோ 
   என்னிலை நீளுமோ 
   விடை தெரியா இந்நிலை ...
 
~யசோதா காந்த் ~

புரியாத புதிராய் ...











புரியாத புதிராய்
என்னுள் பதிந்தாய்
புயலென என்னை
புரட்டிப் போட்டாய்
கலையாத   கனவாய்
மனதில் நின்றாய்
சின்ன சின்ன சிணுங்கல்களோடு
சண்டைகள் தொடர்ந்தாய்
மின்னலை போலே மின்னி மறைந்தாய்
உயிரோடு கலந்தவனே
என் உண்மை நிலை நீ அறியாயோ ?
நம் நெருக்கத்தின் நாட்களை
நம் பிரிவின் நொடிகள் கொன்றுபோட்டதே
நான் துவளும் நிலை நீ தெரிந்தாயோ ?
நீயும் என் நிலை தானோ ?
நிலை அறியாது துடிக்கிறேன் என் அன்பே
வினாக்கள் பல என்னில் .....
பதில் கூறாயோ
எனை சேராயோ
என் உயிரே ...

~அன்புடன் யசோதா காந்த் ~

கண்மணியே ....

கண்மணியே ...

நாலு வரியில் .
நறுக்கென உனக்காய்
கவிதை  எழுத முயன்றும்
தினம் தினம் தோற்கிறேன்
..
கவிதையாய் எழுத தொடங்கி
கட்டுரையாய் அல்லவா முடிக்கிறேன்
எனதன்பே ..

எழுதி முடியா வார்த்தைகளாய் நீ
என்றும் என்னில் ..

~அன்புடன் யசோதா  காந்த்~



சிநேகிதியே .....







சினேகிதியே..


உன்னோடு என் நாட்கள் '
எத்தனை தித்திப்பாய்..
என் இரவுகளில் பூ மெத்தையே படுக்கையாய் ..


உன்னை பிரிந்த நாள் முதல் 
'நெரிஞ்சிமுள் மெத்தை மேல் என் உறக்கம் 


அன்றோ காற்றுக்கும் பொறாமையடி
நம்மில் இடைவெளி இல்லையென 
இன்று பூக்களுக்கும் பரிதாபம் 
'நம்முள் இலையுதிர்   காலம் என்று ..
என்று வரும் நமக்கு மற்றுமொரு 
வசந்த காலம் ஏக்கத்துடன் உன்னவன் ..


~அன்புடன் யசோதா காந்த் ~ 

தாய்மை ,,எங்குதான் இல்லை ??????







தாயே 
உன்னைப்போல் யாருண்டு 
உள்ளம் பூரித்து வாழ்த்துகிறேன் 
ஐந்தறிவோ ஆறறிவோ
தாய்மை ஒன்றல்லவோ 
அவள் எண்ணங்களும் 
ஒன்றல்லவோ ...
சேயின் பசி தீர்த்து 
தானும் மகிழ்ந்திடுவாள் 


~அன்புடன் யசோதா காந்த் ~

தெய்வம் ...





தாய் பசுவின் மடி அது 
மானிடன் கைவசம் ஆதலால் 
பால் இன்றி தவித்த 
பாவம் கன்று அதற்கு
பாய்ந்து வந்து பசி ஆற்றினாள்
பாவை அவள் 
தாய்மையின் தவிப்பில் ...
பெண்ணல்ல அவள் 
தெய்வம் என கண்டேன்


~அன்புடன் யசோதா காந்த்

வர்ண ஜாலம் ..





வளைந்தும் நிமிர்ந்து நிற்கிறாள் 
தன் வண்ணங்களால் 


சிறிது நேர தோற்றமெனினும்
நினைவிலோ நீண்டதாய் 


வளைவினால் வானத்தை வளைக்கிறாள் 
வர்ணங்களால் ஜாலம் காட்டி 
வான வேடிக்கை காட்டுகிறாள் 


தன் அழகால் அவள் 
நம் இதயத்தை சுருட்டி அல்லவா செல்கிறாள் 


~அன்புடன் யசோதா காந்த~ 

குறையில்லை ....







விழிகளிலோ முழு நிறைவு 
எதுவுமில்லை குறைவு 
அன்னை அவள் தோள் ஆதரவில் 
உலகையே (அன்பில் )ஆளுவேன் ஆணவத்தில் 
தாய் அவள் கைகளில் இருந்தால் 
வேறெதுவும் தேவை இல்லையே ....


~அன்புடன் யசோதா காந்த் ~

அழகே ...























இயற்கை எழில் கொஞ்சும் 


இந்த வனம்
இந்த அழகு 
இந்த தனிமை 
இந்த இனிமை 
இதமாய் உன்னோடு 
இனிதாய் வேண்டும் 
இனியவனே என்றும் எப்பொழுதும் 


~அன்புடன் யசோதா காந்த் ~

புல்வெளி ....









சில்லென்று வீசும் காற்று
சத்தமின்றி சொன்னது என் காதில்
உன்னவன் கார் மேகமாய் மாறி
உன்னில் மழை பொழிவான் என்று

காத்திருந்த நானோ கண்மூடி அனுபவித்தேன்
பூமிதனில் புல்வெளியாய் நான் படுத்துறங்க
நீ தரும் நீர் துளியால்
மெல்ல மெல்ல நனைந்து
ஈர ஆடை உடுத்தி நான்
மேனியெங்கும் நீ தழுவ
குளிரிலும் முத்து முத்தாய்
வேர்வைபோல் என் உடலில்
பனிதுளியாய் நீ ...

~அன்புடன் யசோதா காந்த் ~

தவமின்றி கிடைத்த வரமே ,,,















என் அன்பு தோழா கண்டதில்லை
உன்போல் ஓர் ஆண்மகனை
நல்லவர் போல் நய வஞ்சகம் பேசும்
சில கயவர்களுக்கிடையே
நல்ல மனம் படைத்த தூய துணை நீயடா
உள்ளொன்றும், புறமொன்றும் பேசி
புறச்சொல்லால் புகைந்த மனம் கொண்டவர் மத்தியில்
உண்மை உரைத்து என்னிடம் உயர்ந்து நின்றாயடா

போகப்பொருளாய் பெண்ணைக்காணமல்
அன்னையாய் , சோதரியாய்,
பிள்ளை மொழி பேசும் மகளாய் கண்டு
நட்புக்கு பெருமை சேர்த்தாய்

நட்பே, நல்முத்தே
நான் காணும் என் சொத்தே
தவமாமின்றி கிடைந்த வரம் நீ

இறை தவத்தால் மட்டும் வரம் கிடைக்கும்
என யார் சொன்னார்
நட்புதவத்தால் வரமாய் நீ கிடைத்தாய்



~அன்புடன்  யசோதா காந்த் ~

என்னில் நீ உலகமனாய்...











பத்திரிக்கை, கணனி, அரசியல், பொருளாதாரம்
வாழ்க்கையின் வரவு செலவும்
சின்ன, சின்ன கதைகள் பேசி
குழப்பத்தால் வரும் சில குறைகளையும் சொல்லி
கூடவே என் குடும்ப நலன் பேசி
அடுக்களை முதல் அலுவலகம் வரை
இன்றைய நாளின் முடிவையும்
நாளைய நாளின் தொடக்கமும்
பரிவோடு பரிமாறிக்கொள்கிறேன்
என் தோழா, உன்னால் நானும் என் செல்லிடபேசியும்
ஓட்டி பிறந்த இரட்டையராய் இணைந்து போனோம்
உறவுகளில் உயர்ந்தவனே என் தோழா
உறவுகளால் நிறைந்தவனே
உன்னால் நான் உருவமானேன்
என்னில் நீ உலகமனாய்...

~அன்புடன் யசோதா காந்த் ~

புதிய சமுதாயம் படைப்போம் என்று உறுதிமொழி எடுப்போம் ....










அன்னையர் தினம் ..நண்பர்களுக்குள்ளே வாழ்த்துக்கள் பரிமாறி ...தாயின் பெருமைகளை வாழ்த்திகொண்டும் ...கவிதைகள் பல புனைந்தும் .ஆனந்தமாக அனைவரும் இருந்த பொழுதோ ..நண்பர் ஒருவரின் ..கேள்வி ..மனதை கலங்க செய்தது ,,,பெண் என்பவள் ..அன்னையாகவும் ..சகோதிரியகவும் ..தோழியாகவும் ..காதலியாகவும் ..மகளாகவும் ,,,இன்னும் பல வித பாத்திரங்களில் தனது கடமையை செவ்வனே செய்கிறாள் ஆனால் மாமியார் எனும்  பாத்திரம் மட்டும் ...தன் கடைமைகளை சரிவர செய்யாமல் ...கேள்விக்குறியாகவே இருக்கிறதே என்று கூறினார் ....சிந்தியுங்கள் அன்பு தோழிகளே உண்மைதான் ...இன்று நாம் படும் அதே வேதனைகளைதானே ..நம் வருங்கால பெண்  இனம் அனுபவிக்கும்  ...இன்று நம் ஆண் குழந்தைகள் சிறியவர்கள் ..நாளை அவர்கள் வளர்ந்து பெரிதாகும் போது நம் மனங்களும்  மாறித்தான் போகுமோ ...வேண்டாம் அன்பின் தோழிகளே ...நாம் அன்னையாகவே இருப்போம் நம் வீட்டிற்கு வரும் மருமகளிடம் ...வரதட்சணை கேட்க்கமட்டோம் என்றும் ...நம் வீட்டிற்கு வரும் நம் மருமகள் புகுந்த வீடு என்று நினைக்காமல் அதையும் அவர்கள் பிறந்த வீடாய் கருதும் படி ...அன்பினால் அரவணைப்போம் ...என்றும்

இன்று உறுதி கொள்வோம் ...புதிய சமுதாயம் படைப்போம் ..அன்னையாகவே வாழ்வோம்

நன்றி வணக்கம்

~அன்புடன் யசோதா காந்த் ~

உயிரிலே கலந்து .....








என் உயிரே
எந்தன் அழகே
நம்மக்குள் உள்ள காதலை
வடித்தேன் ஓர் கவிதையாய் ...

இமையாக நீ இருக்க 
இமைக்காமல் ரசிக்கின்றேன் 
சுமையாக நான் இருந்தும் 
சுவையாக சுமக்கிறாயே ...


பதுமையாக நீ இருக்க 
புதுமையாக பார்க்கிறேன் 
பனிதுளியாய் நீ இருக்க 
பரவசமாய் ரசிக்கிறேன் 

துயிலாமல் நீ இருக்க 
துடிப்போடு அணைக்கிறேன் 
துணையாக நீ இருக்க 
தொலைதூரம் பறக்கின்றேன் ...
மழையாய் நீ இருக்க 
உனக்குள் குளிர் காய்கின்றேன் 
அனலாய் நீ அணைக்க 
உன்னில் குளிர்கின்றேன் ....

எந்தன் உறவே ...

~அன்புடன் யசோதா காந்த் ~

ஒற்றையடிப்பாதை ....




உன்னோடு நான் இருவழி பயணமாய் அதில் 
தனிமையில் தவிப்போடு நான் 
இன்பத்தில் கைகோர்த்து 
துன்பத்தில் விழி நீர் கோர்த்தும் 


ஒற்றையிலோ ...
மரங்கள் தலையாட்டும் சப்தமும் 
கூ கூ என கூவும் குயில் ஒன்றும் 
கீ கீ என கொஞ்சும் கிளி ஒன்றும் 
ஒற்றை பாதையிலும் ஓர் பாதையாய் 
நேர்கோட்டில் செல்லும் எறும்புகளும் 
என்னோடு துணையாய் ...


~அன்புடன் யசோதா காந்த் ~

நிலவாய் அவள் ...







அழகிய நிலவு என் வானில் நீ 
அன்பான கனவு என் இரவுகளில் நீ 
இன்பமான தொடக்கம் என் விடியலில் நீ 
என் பொழுதுகள் நகரும் பொன் நிமிடங்கள் நீ 
அனைத்து இன்பங்களின் ஆதாரம் நீ 
என் வீட்டின் வெளிச்சம் நீ 
என் நாடி நரம்புகளின் நாதம் நீ 
என் உயிரின் உயிரோட்டம் நீ 
எனதெல்லாம் நீயே நீயே !!!


~அன்புடன் யசோதா காந்த் ~

நட்பு ...







எல்லை இல்லா வனத்தில்
உயரே உயரே பறக்கிறேன்

கள்ளமில்லா சிரிப்பினை
கனவினிலும் கூட சிந்துகிறேன்

அன்பு எனும் அடைமொழியால்
அணையா விளக்காய் எரிகிறேன்

ஆண்  பெண் என்ற பாகுபாடின்றி
அன்பின் நட்புக்களினால் மிளிர்கிறேன்

இறைவன் அருளிய  நட்பு உறவுகளை
கற்பென காத்து போற்றிடுவேன்

~அன்புடன் யசோதா காந்த் ~

குரங்கு ...மனம் ...





மனம் ஒரு குரங்காய்
மரம் விட்டு மரம் தாவி
இருக்கும் இடம் நில்லாமல்
இல்லாதோர் ஒரு  இடம் தேடி
பறக்க நினைக்கும் பறவை போல்
இறகுகள் இன்றி உயர பறந்தே
முடியாத பாதைகளில்
முக்கி  முனங்கி நடைபோட
தெரிந்த விடைகளையும்
துருவி துருவி கேள்வி கேட்டும்
போதுமென்ற நிறைவு இன்றி
பொருளுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு
நடக்காத ஒன்றை நடக்காதோ என்றெண்ணி
எட்டா கனி என்றறிந்தும்
நிம்மதி இழந்து தவிக்கும்
மனம் ஒரு குரங்கு அன்றோ ....


~அன்புடன் யசோதா காந்த்~