விட்டு சென்றாயோ ?




விட்டு சென்றாயோ ?
***********************
நீ மீட்டும் வீணையாய் நானிருந்தேன்
மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டாய்

காணும்பொருள் எல்லாம் நான்என்றுரைத்தாய்
காடு  மலை தாண்டி செற்றுவிட்டாய்

தேடல் எல்லாம் என்னுள் அடக்கம் என்றாய்
தெரிந்தே என்னை தொலைத்துவிட்டாய்

கள்வன்போல் பதுங்கி நின்றுஎன்னை
கவனிப்பதை நான் அறியேனோ ?

இடைவெளி நம்மில் உண்டெனினும்
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் தெரிந்தனவே

கணக்காய்  யாவையும் வைத்துள்ளேன்
நீ காரணம் கேட்கையில் விடை சொல்ல

வியப்பாய் நிற்பதும் நான்மட்டுமல்ல
நீ விதைத்து சென்ற வார்தைக்களும்தான்

விளக்கின் திரி தீரும்முன்
விரைவாய் நீயும் வந்துவிடு ...

~அன்புடன்
~யசோதா காந்த் ~

பிடிவாதம் :












பிடிவாதம்
***********:

தெளிந்த பாலை குடிக்க சொன்னாலும்
அசைவு ஒன்றும் இல்லை 


பதில் சொல்லுங்கள் என ஆயிரம் முறை கேட்டாலும்
சட்டை செய்வதில்லை ..

கதறி அழுது அடம் பிடித்தாலும்
 கண்டுகொள்வதே இல்லை 

 பற்றி எரிந்து தேகமெங்கும் தீ படர்ந்தாலும் 
வேதனையோ விசும்பலோ வெளிப்படுத்துவதே இல்லை

முடிவு செய்தால் அதிலிருந்து .
பின் மாறாத பிடிவாதக்காரர்கள் தான் இவர்கள்
.மரணம் எனும் ஏட்டில்  கையெழுத்து இட்ட இறந்தவர்கள் ...

~யசோதா காந்த் ~

மலடி ...






மலடி ...
************
ஆணென்றும் பெண்ணென்றும்
ஆண்டுக்கொரு மகப்பேறு
அளவில்லா பூரிப்பும்
எல்லையில்லா ஆனந்தமும் ..

பிள்ளைகள் வளரும் அழகை
ஆயிரம் கண்கொண்டு கண்டு ரசித்தாள்
விளையாட்டு பொருட்களையோ
பொக்கிசமாய் பாதுகாத்தாள்..

சுவற்றில் குழந்தைகளின் கிறுக்கல்களை
சுண்ணாம்பு பூசாமல்..ஓவியமாக்கினாள்

பட்டம் பெற்றபோதும் ..பதவிகள் அடந்தபோதும்
பால் கொடுத்த முலைகளும் ..
கருவை வளர்த்த கருவறையும்
மகிழ்ந்து ...கொண்டாடியது ...

மலடியாகவே இருந்திருக்கலாமே என
மனம் கசந்தாள் ..
அடைக்கலமாய் முதியோர் இல்லத்தை
அடைந்த போது ....

~ அன்புடன் யசோதா ..~

பெண்மை சாபமோ....







பெண்மை சாபமோ....
*************************************

நெஞ்சம் பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மானிடரை
நினைக்கையிலே ....

இந்தவரிகள் எத்தனை உண்மை வரிகள் ...

பெண் என்பவள் ..தாயாய் ..சகோதரியாய்,,மனைவியாய் ..குழந்தையாய் ..இன்னும் பல உருவங்களில் இந்த உலகத்தை வலம் வருகிறாள் ..அப்படி பட்ட பெண்ணை மரியாதை கொடுத்து அன்பு செலுத்துவோர் பலர் ..ஆனால் பெண்ணை போதை பொருளாய் சிலர் பார்ப்பதால் ஆண் வர்க்கத்திர்க்கே தலை குனியும் நிலை அன்றோ ...
இன்றைய நாட்களில் பல அதிர்ச்சியான செய்திகள்...காண்கிறோம் கேட்கிறோம்
நம் மனமோ வேதனையில் ..
·         பெற்ற தந்தை குடும்பத்தை போற்றி காவல் காப்பவர் ..அந்த தந்தையே பெற்றமகளின் பெண்மையை சூரையாடினால் ????????
·         அன்பு கூடி உலாவரும் உறவினர் உருவில் கயவர்கள் பாலியல் வன்முறைகள் செய்தால் ????????
·         நண்பனாய் ,,காதலனாய் நம்பிய ஒருவன் அவளை வஞ்சித்து விலைபேசி பலருக்கும் இரையாக்கினால் ??????
·         மாதா , பிதா ,குரு தெய்வம் இதில் மூன்றாம் இடத்தில்  இருக்கும் ஆசிரியர்களே மாணவிகளை காம வெறிக்கு பலியாக்கினால் ????????
எத்தனை எத்தனை கொடூரம் .????..

அந்த நாட்களில் பெண்குழந்தைகளை  வெளியில் விடாமல் கண்ணுக்குள் வைத்து வளர்த்தனர் ..அதைக்கூட நாம் பெண் அடிமைத்தனம் என்றோம், ..அது அடிமைத்தனம் அல்ல பாதுகாப்பு வளையத்தில் காத்து வைத்து இருந்தார்கள் என இப்போது அல்லவா புரிகிறது ...
இன்றைய நாட்களில் பெண் குழந்தைகளை படிக்க அனுப்பும் போதும் வேலைக்கு அனுப்பும் போதும் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு அல்லவா காத்து  இருக்கிறோம் ..

தொடர்ந்து நடக்கும் கொடூரங்களை எப்படி தடுப்பது??
மனித உருவில் மிருகமாய் உலவும் காமக்கயவர்களை எப்படி தெரிந்துகொள்வது ??...இதற்க்கு என்ன செய்வது ??
என்று தீரும் இந்நிலை ??

உங்களில் ஒருத்தியாய் நானும் குமுறுகிறேன் ...
விடை தேடி அலைகின்றேன் ...

~அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~

தமிழ் தாய் ....
















தமிழ் தாய் ...
*********
ஆதியில் தோன்றினாள்
அழகிய மங்கையவள் ..

தெவிட்டாத இன்பம் தரும்
தெளி தேன் அமுதமும் அவள்

கல்லாதவரையும் கவி எழுத செய்யும்
காவிய தலைவி அவள் ..

அன்னை அவளை கற்றே
பட்டம் பெற்ற பண்டிதர் மேதைகள் பலர்

உணர்வுகளில் அன்பை ஊற்றி
ஓர் இனமாய் நம்மை சேர்ப்பாள்

எங்கோ நம்மிலோருவனுக்கு துன்பம் நேர்ந்திடினும்
உலகையே பதறி எழ செய்வாள்

தாயின் பெயரை நாமும் சூட்டி
அழைத்து மகிழ்வோம் பிள்ளை செல்வங்களை ..

.
செந்தமிழ் சொல்லெடுத்து ..
அழகாய் பாட்டு இசைத்து ..

தமிழ் தாய் அவளை ..
வணங்குவோம் வாரீர் வாரீர் ....
~அன்புடன் யசோதா காந்த் ~

மரம் சொல்லும் கதை ...






உன் பாட்டன் 
எதேச்சையாய்
சுவைத்து துப்பிய விதை 
விருட்சமாய் நிற்கிறேன் ....

எப்போது மீண்டும் 
எனை விதைப்பாய் 
உன் பேரனுக்கு 
கதைகள் சொல்ல ??...
                 ~யசோதா காந்த் 

நினைவாய் நீயே என்றும் ...





கண் பார்த்ததும்
கை கோர்த்ததும்
காதோரம் கதை பேசியதும்
காதலால் மகிழ்ந்ததும்
கடைசியில் ..
தவறான புரிதலின் பேரில்
நம்மில் பிரிந்ததும் ..
காலம் ..பல கடந்தும்
நினைவுளே ..மீதமாய் ..

~அன்புடன் யசோதா காந்த் ~

காயங்கள் ...



ஏனோ எனக்கு கனவுகள்
வருவதே இல்லை ...
உணர்வுகள் மங்கி போனதாலோ?
எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஆனதாலோ?
இயற்கையை ரசிக்க மறந்தேன்
நண்பனையும் எதிரியையும் ஒன்றாய் காண்கிறேன்
எதுவும் பிடிக்கவில்லை
என்னையும் எனக்கு பிடிக்கவில்லை
 கத்தியின்றி இரத்தமின்றி
காயங்கள் மட்டும் என்னுளே .....

~அன்புடன் யசோதா காந்த் ~

கடவுள் ...


உலக அதிசயம் எல்லாம் 
உன் முன்னே 
தூசியாய் ..

உன்னை கண்டபின்பும் 
கடவுளையும் தேடுவார் உண்டோ ?

மனிதனுக்கு மனிதம் 
உணர்த்துபவளே ..

அன்பென்ற சொல்லுக்கு அர்த்தமே ..
தாய்மை தளும்பும் 
அன்னையே நீ வாழ்க !!!

                         ~யசோதா காந்த் 

சந்தேகம் ...

















எப்படி அழிப்பேன்
என்னுள் ஆணி வேராய் சந்தேகம் 
பொய்யானதை மெய்யாக்கி
எனை நானே சிதைத்து
என்னில் அன்பு செய்வோரையும்
சுடும் சொல்லால் வதைத்து
கற்பனை குதிரையை
கண்மூடித்தனமாய்  ஓடவிட்டு

இல்லாதொன்றை இருப்பதாக்கி
இன்ப வாழ்க்கையில்
இன்னல்களை சொந்தமாக்கி
சின்னாபின்னாமாக்கும் இப்பிணி
குணமாகுமோ என்னிலிருந்து?
உயிராய் எனை நேசிக்கும் மனமும்
வெறுப்பாய் மாற செய்யுதே
மீளா குழிதனிலிருந்து
மீள்வேனோ 
   என்னிலை நீளுமோ 
   விடை தெரியா இந்நிலை ...
 
~யசோதா காந்த் ~

புரியாத புதிராய் ...











புரியாத புதிராய்
என்னுள் பதிந்தாய்
புயலென என்னை
புரட்டிப் போட்டாய்
கலையாத   கனவாய்
மனதில் நின்றாய்
சின்ன சின்ன சிணுங்கல்களோடு
சண்டைகள் தொடர்ந்தாய்
மின்னலை போலே மின்னி மறைந்தாய்
உயிரோடு கலந்தவனே
என் உண்மை நிலை நீ அறியாயோ ?
நம் நெருக்கத்தின் நாட்களை
நம் பிரிவின் நொடிகள் கொன்றுபோட்டதே
நான் துவளும் நிலை நீ தெரிந்தாயோ ?
நீயும் என் நிலை தானோ ?
நிலை அறியாது துடிக்கிறேன் என் அன்பே
வினாக்கள் பல என்னில் .....
பதில் கூறாயோ
எனை சேராயோ
என் உயிரே ...

~அன்புடன் யசோதா காந்த் ~

கண்மணியே ....

கண்மணியே ...

நாலு வரியில் .
நறுக்கென உனக்காய்
கவிதை  எழுத முயன்றும்
தினம் தினம் தோற்கிறேன்
..
கவிதையாய் எழுத தொடங்கி
கட்டுரையாய் அல்லவா முடிக்கிறேன்
எனதன்பே ..

எழுதி முடியா வார்த்தைகளாய் நீ
என்றும் என்னில் ..

~அன்புடன் யசோதா  காந்த்~



சிநேகிதியே .....







சினேகிதியே..


உன்னோடு என் நாட்கள் '
எத்தனை தித்திப்பாய்..
என் இரவுகளில் பூ மெத்தையே படுக்கையாய் ..


உன்னை பிரிந்த நாள் முதல் 
'நெரிஞ்சிமுள் மெத்தை மேல் என் உறக்கம் 


அன்றோ காற்றுக்கும் பொறாமையடி
நம்மில் இடைவெளி இல்லையென 
இன்று பூக்களுக்கும் பரிதாபம் 
'நம்முள் இலையுதிர்   காலம் என்று ..
என்று வரும் நமக்கு மற்றுமொரு 
வசந்த காலம் ஏக்கத்துடன் உன்னவன் ..


~அன்புடன் யசோதா காந்த் ~ 

தாய்மை ,,எங்குதான் இல்லை ??????







தாயே 
உன்னைப்போல் யாருண்டு 
உள்ளம் பூரித்து வாழ்த்துகிறேன் 
ஐந்தறிவோ ஆறறிவோ
தாய்மை ஒன்றல்லவோ 
அவள் எண்ணங்களும் 
ஒன்றல்லவோ ...
சேயின் பசி தீர்த்து 
தானும் மகிழ்ந்திடுவாள் 


~அன்புடன் யசோதா காந்த் ~

தெய்வம் ...





தாய் பசுவின் மடி அது 
மானிடன் கைவசம் ஆதலால் 
பால் இன்றி தவித்த 
பாவம் கன்று அதற்கு
பாய்ந்து வந்து பசி ஆற்றினாள்
பாவை அவள் 
தாய்மையின் தவிப்பில் ...
பெண்ணல்ல அவள் 
தெய்வம் என கண்டேன்


~அன்புடன் யசோதா காந்த்

வர்ண ஜாலம் ..





வளைந்தும் நிமிர்ந்து நிற்கிறாள் 
தன் வண்ணங்களால் 


சிறிது நேர தோற்றமெனினும்
நினைவிலோ நீண்டதாய் 


வளைவினால் வானத்தை வளைக்கிறாள் 
வர்ணங்களால் ஜாலம் காட்டி 
வான வேடிக்கை காட்டுகிறாள் 


தன் அழகால் அவள் 
நம் இதயத்தை சுருட்டி அல்லவா செல்கிறாள் 


~அன்புடன் யசோதா காந்த~ 

குறையில்லை ....







விழிகளிலோ முழு நிறைவு 
எதுவுமில்லை குறைவு 
அன்னை அவள் தோள் ஆதரவில் 
உலகையே (அன்பில் )ஆளுவேன் ஆணவத்தில் 
தாய் அவள் கைகளில் இருந்தால் 
வேறெதுவும் தேவை இல்லையே ....


~அன்புடன் யசோதா காந்த் ~

அழகே ...























இயற்கை எழில் கொஞ்சும் 


இந்த வனம்
இந்த அழகு 
இந்த தனிமை 
இந்த இனிமை 
இதமாய் உன்னோடு 
இனிதாய் வேண்டும் 
இனியவனே என்றும் எப்பொழுதும் 


~அன்புடன் யசோதா காந்த் ~

புல்வெளி ....









சில்லென்று வீசும் காற்று
சத்தமின்றி சொன்னது என் காதில்
உன்னவன் கார் மேகமாய் மாறி
உன்னில் மழை பொழிவான் என்று

காத்திருந்த நானோ கண்மூடி அனுபவித்தேன்
பூமிதனில் புல்வெளியாய் நான் படுத்துறங்க
நீ தரும் நீர் துளியால்
மெல்ல மெல்ல நனைந்து
ஈர ஆடை உடுத்தி நான்
மேனியெங்கும் நீ தழுவ
குளிரிலும் முத்து முத்தாய்
வேர்வைபோல் என் உடலில்
பனிதுளியாய் நீ ...

~அன்புடன் யசோதா காந்த் ~

தவமின்றி கிடைத்த வரமே ,,,















என் அன்பு தோழா கண்டதில்லை
உன்போல் ஓர் ஆண்மகனை
நல்லவர் போல் நய வஞ்சகம் பேசும்
சில கயவர்களுக்கிடையே
நல்ல மனம் படைத்த தூய துணை நீயடா
உள்ளொன்றும், புறமொன்றும் பேசி
புறச்சொல்லால் புகைந்த மனம் கொண்டவர் மத்தியில்
உண்மை உரைத்து என்னிடம் உயர்ந்து நின்றாயடா

போகப்பொருளாய் பெண்ணைக்காணமல்
அன்னையாய் , சோதரியாய்,
பிள்ளை மொழி பேசும் மகளாய் கண்டு
நட்புக்கு பெருமை சேர்த்தாய்

நட்பே, நல்முத்தே
நான் காணும் என் சொத்தே
தவமாமின்றி கிடைந்த வரம் நீ

இறை தவத்தால் மட்டும் வரம் கிடைக்கும்
என யார் சொன்னார்
நட்புதவத்தால் வரமாய் நீ கிடைத்தாய்



~அன்புடன்  யசோதா காந்த் ~