|
மழலை
10 years ago
தமிழ் தாய் ...
*********
ஆதியில் தோன்றினாள்
அழகிய மங்கையவள் ..
தெவிட்டாத இன்பம் தரும்
தெளி தேன் அமுதமும் அவள்
கல்லாதவரையும் கவி எழுத செய்யும்
காவிய தலைவி அவள் ..
அன்னை அவளை கற்றே
பட்டம் பெற்ற பண்டிதர் மேதைகள் பலர்
உணர்வுகளில் அன்பை ஊற்றி
ஓர் இனமாய் நம்மை சேர்ப்பாள்
எங்கோ நம்மிலோருவனுக்கு துன்பம் நேர்ந்திடினும்
உலகையே பதறி எழ செய்வாள்
தாயின் பெயரை நாமும் சூட்டி
அழைத்து மகிழ்வோம் பிள்ளை செல்வங்களை ..
.
செந்தமிழ் சொல்லெடுத்து ..
அழகாய் பாட்டு இசைத்து ..
வணங்குவோம் வாரீர் வாரீர் ....தமிழ் தாய் அவளை ..~அன்புடன் யசோதா காந்த் ~
எப்படி அழிப்பேன்பொய்யானதை மெய்யாக்கி
என்னுள் ஆணி வேராய் சந்தேகம்எனை நானே சிதைத்து
என்னில் அன்பு செய்வோரையும்
சுடும் சொல்லால் வதைத்து
கற்பனை குதிரையை
கண்மூடித்தனமாய் ஓடவிட்டு
இல்லாதொன்றை இருப்பதாக்கி
இன்ப வாழ்க்கையில்
இன்னல்களை சொந்தமாக்கி
சின்னாபின்னாமாக்கும் இப்பிணி
குணமாகுமோ என்னிலிருந்து?
உயிராய் எனை நேசிக்கும் மனமும்
வெறுப்பாய் மாற செய்யுதேமீளா குழிதனிலிருந்துமீள்வேனோ