1/01/2012 08:17:00 PM
|
by யசோதா காந்த்
உழைப்பில்
பயத்தில்
பிணியில்
துணையாய் வேர்வை துளிகள் அன்றோ !
பஞ்சத்தில்
விவசாயத்தில்
உயிர்வாழ்வில்
வரபிரசாதமாய் மழை துளிகள் அன்றோ !
துயரத்தில்
ஆனந்தத்தில்
பிரிவில்
ஆறுதலாய் கண்ணீர் துளிகள் அன்றோ !
ஜனனத்தில்
விபத்தில்
உயிர்கொடுக்க
ஆதரவாய் இரத்த துளிகள் அன்றோ!
~அன்புடன் யசோதா காந்த் ~
நல்லா இருக்கு
சிறு சிறு அழகான கவிதைகள். வாழ்த்துக்கள்.
http://idimulhakkam.blogspot.com/
நன்றி சசிகலா அவர்களே ...
நன்றி இடிமுழக்கம் அவர்களே ...