
யாராய் இருந்தாள் அவள் எனக்கு
அன்பு மிகு அன்னையாய்
அறிவு சொல்லும் ஆசிரியையாய்
பணிவிடைகள் செய்யும் செவிலியாய்
எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் தோழியாய்
சில நேரங்களில் சண்டைக்காரியாய்
பல நேரங்களில் குழந்தையாய்
மணமுடித்த நாள் முதல்
மகிழ்ச்சிக்கு குறைவே இல்லையே
யார் கண் பட்டதோ
மாயமாய் மறைந்து விட்டாளே
சுமங்கலியாய் போய் சேர வேண்டும் என்பாள்
அடிக்கடி சொல்லும் வாரத்தை அது
அரங்கேறி போனதே
எமனும் அவள் சொல் கேட்டதேன் ?
ஒரு நொடியும் பிரியாத நான்
எப்படி அவளின்றி நிரந்தரமாய் ?
என் தோல்வி நேரங்களில்
வெற்றிப்பாதை காட்டியவளே
இனி யார் என் மனம் தெரிந்து நடப்பார் ???
யார் என் காது மடல் வருடி கொடுத்து தூங்க செய்வார் ?? ..
யாரிடம் என் வரவு செலவு சொல்வேன் ??..
கண்ணை காட்டில் விட்டாளே
அழகே உன் பூமுகம் எங்கே ??
சகியே உன் புன்னகை எங்கே ??
ஓ காலனே வா வா வா ..
என்னையும் அழைத்து போ போ போ ..
~அன்புடன் யசோதா காந்த் ~
என் தோல்வி நேரங்களில்
வெற்றிப்பாதை காட்டியவளே
இனி யார் என் மனம் தெரிந்து நடப்பார் ???
யார் என் காது மடல் வருடி கொடுத்து தூங்க செய்வார் ?? ..
யாரிடம் என் வரவு செலவு சொல்வேன் ??..
கண்ணை காட்டில் விட்டாளே
அழகே உன் பூமுகம் எங்கே ??
சகியே உன் புன்னகை எங்கே ??
ஓ காலனே வா வா வா ..
என்னையும் அழைத்து போ போ போ ..
~அன்புடன் யசோதா காந்த் ~
nice.... thanks to share... please read my tamil kavithaigal in http://www.rishvan.com
அவளின்றி எப்படி நிரந்தரமாய் அருமை
நன்றி ரிஸ்வன் அவர்களே ..
நன்றி சசிகலா அவர்களே ..