உலகெங்கும் கொடிகட்டி பறப்பவன் தமிழன்
ஊர் எல்லையில் ஆதரவின்றி கிடப்பவனும் தமிழன்
தீமையை கண்டு குரல் கொடுப்பவன் தமிழன்
கொடுமைகள் கண்டும் கண் மூடிகொள்பவனும் தமிழன்
தலை நிமிர்ந்து நடை போடுபவன் தமிழன்
குட்ட குட்ட குனிந்து தளர்பவனும் தமிழன்
புதுமைகள் பல படைப்பவன் தமிழன்
பழமையில் ஊறி திளைப்பவனும் தமிழன்
பாகுபாடின்றி சமபந்தி உண்பவன் தமிழன்
ஜாதி வெறியில் இரத்தம் சிந்துபவனும் தமிழன்
அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தமிழன்
இரக்கமற்ற சிலசெயல்கள் புரிபவனும் தமிழன்

தமிழ் மறந்து பிறமொழியில் பேரம் பேசுபவனும் தமிழன்
தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழனுக்கென்று தனிக்குணம் உண்டென்று அறிந்து
நல் தமிழனாய் வாழ்வோம் ...
தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழனுக்கென்று தனிக்குணம் உண்டென்று அறிந்து
நல் தமிழனாய் வாழ்வோம் ...
~ அன்புடன் யசோதா காந்த் ~
அழகிய கவிதை .. அன்பின் யசோதா ..
தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழனுகென்று தனி குணம் உண்டென்று அறிந்து நல் தமிழனாய் வாழ்வோம் ..
அன்புடன்
விஷ்ணு
நன்றி அன்பின் விஷ்ணு அவர்களே ..
ரொம்ப நல்லா இருக்கு ஜெர்ரி. வாழ்த்துக்கள்.
நன்றி நீலமேகம் (டோம்)அவர்களே
௦
௦