11/08/2011 08:59:00 PM
|
by யசோதா காந்த்
ஜாதக பொருத்தம் பார்த்தும்
வேதங்கள் மந்திரம் ஓதியும் நவீனமுறையில் பதிவு செய்தும்
சேர்ந்த திருமண பந்தங்களே ..
காலம் சில சென்ற பின்
பிரிவென்று வருகிறதே
இறைவன் படைத்த உயிர்கள் அனைத்தும்
இணைந்து வாழதானே ..
ஐயிந்தறிவுகளே ஆனந்தமாய் கூடி குலாவுகின்றன நன்றாய்
ஆறறிவு உள்ள நாமோ
விட்டு கொடுக்க மறுத்தும்
அன்பு செய்ய மறந்தும்
அவதி படுவதேனோ ??
மனங்களை ரணங்களாக்கி
விவாதம் பொதிந்த விவாகரத்துக்களே
பிரிந்த பின்போ துயரத்திலே
ஏனோ இந்த நிலைமை
வாழ்க்கை ஒருமுறையல்லவா வாழ்ந்திடுவோம் இன்பமுற
வையகத்திலே....
~ அன்புடன் யசோதா காந்த் ~
11/06/2011 04:45:00 PM
|
by யசோதா காந்த்
கோழியும் .முட்டைகறியும் சமைத்தாள்
பிள்ளைகளுக்கோ தரவில்லை
ஏனோ தானோ வென உணவு தந்து
பிஞ்சுகளின் பசியாற்றி தானும உண்டாள்
கணவன் வருகை காத்திருந்து
ஒளித்து வைத்த உணவை தந்தாள்
மனதிலோ மருகி உருகி
இறைவா இவருக்கு சக்தி கொடு என
வேண்டினாள்
திரைப்படங்களில் அடியாள் வேடம்செய்யும் கணவனுக்காய்
~அன்புடன் யசோதா காந்த் ~
11/01/2011 11:42:00 AM
|
by யசோதா காந்த்
பழக்கடை முதல்
பல கடைகளிலும்
குளிர்ந்தும் வியர்த்தும்
குறைவின்றி இருந்தேன் ..
அன்றொருநாள்
பெரியவர் வாங்கிய பலசரக்கோடு
அடைக்கலமானேன்
அழையா விருந்தாளியாய் அடுப்படியில் ..
நிம்மதி நீடிக்கவில்லை
அன்றே அகதியானேன்
குப்பைத்தொட்டியில் தொடங்கி
அன்றிரவே ஆற்றங்கரை ஓரத்தில் ..
விடியவே இல்லை
வேகமாய் வந்த பெருங்காற்றில்
பறந்தேன் பறவை போல் பெருமிதத்தில் .
முடிவு எங்கோ என நினைத்து
முடியும் முன் விழுந்தேன்
முள்வேலி ஒன்றில் ...
படபடத்து சிக்கி தவிக்கிறேன்
கொஞ்சம் காயங்களுடன்
நான் மட்டுமல்ல
அகதிகள் பலர் என்னைப்போல
விடிவிப்பார் எவருமின்றி
தொங்கிக்கொண்டு...
இப்படிக்கு
அழிவே இல்லாத பாலிதீன் பை ..
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/31/2011 12:35:00 PM
|
by யசோதா காந்த்
பாழடைந்த கட்டிடத்தில்
தலைகீழாய் வவ்வால் ஒன்று
எங்கோ ஒரு மரத்தில்
பெரிய ஆந்தை ஒன்று
அந்த ஏரிக்கரையில்
சத்தமிடும் தவளை ஒன்று
தெரு மூலையில்
எதையோ பார்த்து குரைக்கும்
கருப்பு நாய் ஒன்று
காரணமே இன்றி
அங்குமிங்கும் குறுக்கே ஓடும்
வெள்ளை பூனை ஒன்று
தனிமையாய் சோக கீதம் பாடும்
சின்ன குயிலொன்று
இவைகளை போல தனிமையில் விட்டத்தை
வெறித்து பார்க்கும்
உனக்காய் தவிக்கும் உயிர் ஒன்று ..
~அன்புடன் யசோதா காந்த் ~
10/28/2011 09:16:00 PM
|
by யசோதா காந்த்
ஆயிரம் ஆயிரம் துறைகளிலே
ஆதிக்கம் செலுத்துவோரோ
ஆயிரம் ஆயிரமே
ஆள் பலம் பண பலம்
உடையவற்கோ
தரம் இல்லையெனினும்
முதலாய் உயர்பதவிகளில்
கல்வியோ .விளையாட்டிலோ
திறமை உள்ளவரோ
ஏழை என்ற காரணத்தால்
ஏற்றங்கள் எட்டவில்லை
ஏற்றி விடும் ஏணிகளும்
ஏழை அவனுக்கு இல்லை
பட்டங்களும் சான்றிதழ்களும்
வறுமை எனும்
இருண்ட சிறைதனிலே
என்று மாறும் இந்த நிலை ?
விடைகள் இல்லா வினாக்களே ...
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/26/2011 09:09:00 PM
|
by யசோதா காந்த்
இது என்ன தேவதைகள் நகரமா ?
பார்க்க ஆயிரம் விழிகள் வேண்டுமோ ?
யாரைத்தான் வர்ணிப்பது ?
குட்டி குட்டி தேவதைகளும்
அங்கும் இங்குமாய் ...
மூதாட்டிகளும் தேவதைகளே
பிரம்மனுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை ?
இங்கு மட்டும் அழகாய் படைக்க?
சிறுவயதில் படித்திருக்கிறேன்
வானத்து தேவதைகளை
உயரமாய் அழகிய விழிகளோடு ....
இப்போதோ
நேரிலும் காண்கிறேன் ...
அதே தேவதைகளை
ஓவியனாய் நான் இருந்தால்
ஓராயிரம் ஓவியங்கள் தீட்டிருப்பேன்
கவிஞனாய் இருந்தால்
கோடி கவிதைகள் வரைந்திருப்பேன்
அழகான தேவதைகள் ...
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/25/2011 09:31:00 PM
|
by யசோதா காந்த்
காற்றே உன் முகங்கள் எத்தனை ?
நீ செய்யும் செயல்களோ எத்தனை எத்தனை ???
சில்லென்றுசெல்லமாய் வீசி
என்னை குளிர செய்கிறாய் ...
தாலாட்டி மெல்லமாய் வீசி ...
திண்ணையில் தாத்தாவை உறங்க செய்கிறாய் ...
மிதமாய் மோகமாய் வீசி
பூக்களை தலை ஆட்டி சிரிக்க செய்கிறாய் ...
தட தட சப்தமாய் வீசி
தொட்டிலில் இருக்கும் குழந்தையை அழ செய்கிறாய் ...
சட்டென்று வேகமாய் வீசி
பாவம் கோழிக்கூட்டின் கதவை உடைக்கிறாய் ...
சுழலாய் சுருண்டு வீசி
புழக்கடையில் கழுவ கிடக்கும்
பாத்திரங்களை பறந்திட செய்கிறாய் ...
புயலாய் கோபமாய் வீசி
முற்றத்து தென்னை மரத்தை சாய்த்தே விட்டாய் ...
சூறாவளியாய் பாய்ந்து வீசி
எங்க வீட்டு மேல் கூரையை தூக்கி செல்கிறாய் ...
புழுதி கற்றாய் குப்பையாய் வீசி
சுவாசிக்கும் சுவாசத்தை தடை செய்கிறாய் ..
ஆனால் இறைவனை போல
பிராண வாயு வாக இருந்து
எங்களை உயிர் வாழசெயகிறாய் ...
~அன்புடன் யசோதா காந்த் ~
10/23/2011 08:08:00 PM
|
by யசோதா காந்த்
நல்லதொரு வைகாசி மாதமொன்றில் நல்ல நேரம் கூடிய பொழுதினில் வீரமிகு ஆண்மகன் கைகள்தனில் மூன்று முடிச்சு வாங்கிக்கொண்டேன் கழுத்தினில் ..
தீடீரென அழைப்பு வந்ததில்
புறப்பட்டு சென்றான் சடுதியில்
வீரன் அவன் வேலையோ ராணுவத்தினில்
பிரியா விடைகொடுத்தேன் மௌனத்தில் ...
நான் நடந்து போகின்ற வீதிதனில்
வீரன் மனைவி என கேட்கும் வாழ்த்துதனில்
என் மனமோ பிரிவை மறந்து பெருமிதத்தில்
அவனுடன் சேர்ந்திடுவேன் மற்றொரு பொழுதுதனில்
சாய்ந்திடுவேன் வீரனவன் மார்புதனில்
நாட்டுக்காய் ஈன்றிடுவேன் பிள்ளைகள் பல ஆனந்தத்தில்
வளர்ந்திடுவர் வீரமாய் பாரத தாயின் தாலாட்டுதனில் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/22/2011 07:42:00 PM
|
by யசோதா காந்த்
அதை தருவோம் இதை தருவோம்
வாழ்க்கை முறையை மாற்றி விடுவோம்
வசிய வார்த்தைகள் பல கேட்டோம்
சொற்கள் வீச்சில் நிலை குலைந்தோம்
குழப்பங்களுடன் ஓட்டும் பதித்தோம்
கேட்டவைகள் கிடைத்திட காத்திருந்தோம்
எதிர் பார்த்ததோ அட்சய பாத்திரம்
கிடைத்ததோ பிச்சை பாத்திரம்
அரசியல் சூதாட்டத்தில் பகடைகளாணோம்
அரசாங்கத்தால் என்றென்றும் ஏமாற்றபட்டோம்
ஒளிவீசும் விடியலுக்காய் விழித்திருப்போம்(???)
~அன்புடன் யசோதா காந்த்~
10/19/2011 10:25:00 PM
|
by யசோதா காந்த்
நீ எங்கள் பூமி வீட்டின் கூரையல்லவா
உலக நாடுகளை இணைக்கும் பாலமல்லவா
இயற்கை தனை அள்ளி தரும் வாசலல்லவா
இரவு பகலை உணர்த்தும் கடிக்காரமல்லவா
பறவைகளின் விளையாட்டு மைதானமல்லவா
உனை பாடாத கவிஞனும் உண்டோ
வானவில்லில் வர்ணம் காட்டி
வசியம் செய்யும் வல்லபனே
இரவில் உன் அழகை காண
இறைவனும் இறங்கி வருவானே ...
அழகை அள்ளி தெளித்து
நட்சத்திர கோலமிட்டு
திருஷ்டி படாமலிருக்க
நிலவை பொட்டாக்கி...
ஒ வானமே உன்னை
என்னவென்று வர்ணிப்பேன்
~யசோதா காந்த் ~
10/19/2011 12:49:00 PM
|
by யசோதா காந்த்
சரியோ ?தவறோ?தெரியவில்லை
மனதின் வலிகளை மறைக்கவில்லை
நல்லதும் கண்டேனே தீயதும் கண்டேனே
விவரங்கள் அறிந்த நாள் முதலாய்
சொந்தமென்று சொல்ல ஒரு வீடு இல்லை
அவ்வப்போது சொந்தமாய்
வாடகை வீடுகள்தானே...
மாறி மாறி குடி கொண்டோம்
வீடுகளை மட்டுமல்ல
கல்விகூடங்களையும்தானே
புது புது மனிதர்கள் அறிமுகமாய்
நண்பர்கள் கூட்டம் தாராளமாய்..
தடைகளோ எங்களுக்கு ...
வாழும் வாழ்கையிலும்
வசிக்கும் வீடுகளிலும்..
.
சுவரில் ஆணி அடிக்க தடை
பத்து மணிக்கு மேல்
விளக்கு எரிக்க தடை
உரக்க பேசி சிரிக்க தடை
சொந்த பந்தங்கள் வருவதிலும் தடை
வாளி தண்ணீர் ஒன்றுக்கு மேல்
குளிக்க தடை
சில தடைகளை சொல்வதற்கே
எனக்குள் வெட்க தடை...
சரியாய் வாடகை பணம் கொடுத்தும் நாங்கள்
ஏனோ ஆனோம் நிரந்தர அடிமைகள்
ஒவ்வொரு வாடகை வீடுகளிலும் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/18/2011 12:42:00 PM
|
by யசோதா காந்த்
வாழ்கையில் அவசர ஓட்டத்தின் நடுவில்
வாழ்ந்ததையும் தேடலாய்
தேடல் என்பதா ? ஆசை என்பதா ?
தீராத ஏக்கம் என்பதா ?
கண்கள் மூடி கிடக்கும் நேரம்
பின்னோக்கியே ஓடும் மனம் ..
ஆரம்ப பள்ளியின் ஆசிரியர் முகங்கள்
ஒன்றாய் திரிந்த தோழர்களின் முகங்கள்
உறுதி கொண்டேன்....எனக்குள்
நாளை முதல் ஒன்று சேர்க்கவேண்டும்
ஒவ்வொரு வகுப்பிலும் நாங்கள்
எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ...
வாழ்பவர் எத்தனை பேரோ
மறைந்தவர் எத்தனை பேரோ
இல்லை மறந்தவர்தான் எத்தனை பேரோ
முகங்கள் தெரியா பெயர்கள்
பெயர்கள் தெரியா முகங்கள் இன்றும் நினைவில்...
தேடுதல் வேட்கை தொடரும்
புகை படங்களையும் ..அவர்களையும்
அந்த இனிய நாட்களையும் ....
~அன்புடன் யசோதா காந்த் ~
10/17/2011 11:49:00 AM
|
by யசோதா காந்த்
உள்ளூர் அம்மன்கோவில் திருவிழா
ஊர் மக்களோ ஆர்ப்பாட்டமாய்
பெண்களெல்லாம் பூச்சூடி பொங்கல் வைக்க
சிறுவர்களோ ராட்டினம் சுற்ற..
இளவட்டங்களும்,முதுவட்டங்களும்
கரகாட்டம் ,ஒயிலாட்டம் வேடிக்கை பார்க்க
வயதான பெண்களோ வில்லுப்பாட்டும் ,,
கதைகளும் கேட்டு இருக்க
கெடா கறி விருந்திற்காய்
உறவுமுறைகள் காத்திருக்க
ஒலிபெருக்கியில்
வரி பணத்திற்காய் யாரோ குரல்கொடுக்க
பரபரப்பாய் ,,கோலாகலமாய் கொண்டாட
அமைதியாய் கண்மூடி தழை அசைபோட்டன
பூசாரிக்காய் காத்திருக்கும் நேர்ச்சை கெடாக்கள் !
~அன்புடன் யசோதா காந்த்~
10/15/2011 12:22:00 PM
|
by யசோதா காந்த்
காளை ஒருவனை கண்டேன்
கண்ட அவனோ கள்வன்
கோபம் நான் கொண்டதால்
விழிகள் எனும் சிறைக்குள்
வீழ்த்தி தண்டித்தேன் ...
அவனும் என் தீர்ப்பறிய
நெஞ்செனும் சிறைகூட்டில் விழுந்தான்
என் காதலையே ஆயுள் தண்டனையாய்
நான் தீர்ப்பெழுத
நானும் கள்வனின் காதலி ஆனேன் ...
விரும்பியே நானும்
அவன் மடியில்விழ
அவனோ
தன் பரந்த தோள்களில்
விரிந்த மார்பினில் அணைத்துகொண்டான்
ஆயுள் கைதியாய் ...
இருவரும் காதல் சிறைக்குள்
இந்த ஜென்மம் தீர்ப்போம் ..
~அன்புடன் யசோதாகாந்த் ~
10/13/2011 08:41:00 PM
|
by யசோதா காந்த்
இரவும் பகலும் இருவரும்
மழையிலும் வெயிலிலும்
பனியிலும் குளிரிலும்
புயலிலும் பூகம்பத்திலும்
நூற்றாண்டுகளாய்
நெடுந்தூர பயணம்
ஒருநொடி கூட விலகாமல்
இத்தனை இருந்தும்
கை கோர்க்க(சேர்க்க) முடியாமல்
தனி தனியே ...நாங்கள்
~அன்புடன் யசோதா காந்த்~
10/12/2011 08:57:00 PM
|
by யசோதா காந்த்
நாட்டிலோ பலவகை மரங்கள்
போதிமரத்திற்கோ புனித கதைகள்
புத்தி வந்து ஆசைகள் களைந்தார்
புத்த பெருமான்
போதிமரம் தான் காரணம் என்றால்
ஆயிரமாயிரம் புத்தர்கள் எங்கே ??
மரம் ஒன்றும் காரணமில்லை
மனம் ஒன்றே காரணமாய்...
பெண் மண் ஆசை
பொன் பொருள் ஆசை
இவைகள் இல்லா மனிதனும் இல்லை
ஆசைகள் துறக்க போதிமரம் தான்
வேண்டுமென்பதில்லை..
என்றோ ஒருவன் புத்தன் ஆனான்
போதிமரமும் புனிதமாயிற்றே
புத்தனுக்கு ஆசை இல்லை என்று யார் சொன்னது ??
ஆசைகளை துறக்கும் ஆசை இருந்ததால் தானே
புத்தனும் துறவி ஆனான் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/11/2011 08:50:00 PM
|
by யசோதா காந்த்
இறைவன் வருவான்
வரமென்ன வேண்டும் என்பான் ??
பிறவிகள் இரண்டில் ஒன்று
கேட்பேன் வரமாய்...
தாயுள்ளம் கொண்டவன் அவன்
தயக்கமின்றி தந்திடுவான்...
முதல் வரமாய் ......
கடவுளாய் நான்
மற்றொன்றோ ...............
குழந்தையாய் நான்
உலகின் உயிர்களை நினைத்து
அவைகளுக்கு அனைத்தையும் ஈந்து
ஆனந்தத்தில் ஆழ்த்திடுவேன்
கடவுள் நானென்றால்...
உலகையே மறந்து
கவலைகள் துறந்து
குதுகலிப்பேன் கொண்டாட்டமாய்
ஒன்றுமறியா குழந்தை நானென்றால்
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/10/2011 09:04:00 PM
|
by யசோதா காந்த்
பத்தினி பெண் நீ என்பதால்
உன்னை தலை வணங்குகிறேன்
மதுரையை நீ எரித்ததால்
உன்மேல் எரிச்சல் அடைகிறேன்...
ஈ எறும்பினை கொல்வதே பாவம் அன்றோ
நீயோ எத்தனையோ உயிர்களை
இரக்கமின்றி கொன்றாயே
உன் கணவன் ஒன்றும் உத்தமன் இல்லையே
உன்னை விட்டு
மாதவி காலடியில் கிடந்தவன் ஆயிற்றே
ஒரு வேளை
உத்தமனாய் அவன் இருந்திருந்தால்
உலகத்தையே அழித்திருப்பாயோ ???
பெண் என்றால் பேயும் இரங்குமே
இதயமே இல்லாதவளா பெண்ணே நீ ??
புத்தகங்கள் வேண்டுமானால் உனை புகழட்டும்
எனக்கு உன் மேல் என்றென்றும் கோபமே !
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/10/2011 07:15:00 PM
|
by யசோதா காந்த்
காலைக்கதிரவன்
கண்சிவந்து நிற்க
காரணம் நான் கேட்க
ஏதேதோ அவன் சொல்ல
நேரமும் நகர்ந்தது மெல்ல ..
சுள்ளென்று அவன் சுட்டெரிக்க
சட்டென்று என் மனமும் எரிச்சல் கொள்ள
குளிர்தரும் மழையே நன்று
நீயோ கொடியவன் என்றேன் ..அவனிடம்
புரிந்து கொள்வாய் நீயென எள்ளி நகையாடினான் ..
சிறிது நாட்கள் சென்றதும்
நான் விரும்பிய குளிர்காலம் வந்தது
சில தினங்கள் அனுபவித்தேன் ஆவலாய்
வீட்டின் உள்ளும் புறமும் இதமான குளிர்
இடைவெளி இல்லா அடைமழையும்
நாட்கள் செல்ல செல்ல
அலுத்தது அதுவும் எனக்கு
மழையினால் வேலைகள் கூட முடங்கி போனது
பகலில் கூட இரவின் சாயல்
மெல்ல தேடியது மனம் உச்சிவெயில் வேண்டுமென்று ..
அடை மழை கூடித்தான் போனது ...
எனக்கு மட்டுமல்ல
என் வீட்டு மிருக ஜீவன்களுக்கும்
மழை பிடிக்காமல் போனது ..
கண்கள் கிழக்கில்
கதிரவன் வரவை காண
இறைவனை
வேண்டி நின்றது மனம்
வெயிலில் மழையையும்
மழையில் வெயிலையும்
தேடும் மனதை என்னவென்பது ??
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/09/2011 09:35:00 PM
|
by யசோதா காந்த்
தாயின் ஆசை யான முதல் அணைப்பு
தந்தையின் பாசம் நிறைந்த அணைப்பு
ஆசான் தரும் அறிவின் அணைப்பு
தெய்வம் தரும் பக்தி அணைப்பு
நண்பன் தரும் ஆறுதல் அணைப்பு
சொந்தங்கள் தரும் அன்பின் அணைப்பு
மேலதிகாரிகளின் கனிவான அணைப்பு
சமுதாயத்தின் பண்பான அணைப்பு
காதலால் வரும் இன்ப அணைப்பு
வயோதிகத்தில் வரும் மரண அணைப்பு
மனிதனின் தொடக்கம் தொடங்கி
முடிவுவரை தொடரும்
அரவணைப்புகள்
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/08/2011 05:00:00 PM
|
by யசோதா காந்த்
நான் கொடுத்த முத்தங்கள் எத்தனை
எண்ணிக்கை எனக்கு மறந்து போனது
நீ எண்ணிய என் முத்தங்கள் இனித்ததா ??
எல்லாமே எனக்கு தித்திப்பாய் ..
ஒன்றுக்கொன்று
விஞ்சியும் மிஞ்சியும் ...
கெஞ்சியது என் மனம்
கொஞ்சி மகிழ பூ முத்தங்கள்
இன்னும் வேண்டுமென்று ..
முத்தபோட்டியில்
ஜெயிப்பது நீயா நானா ??
ஜெயிப்பவர்களுக்கு முத்தமே பரிசாய்
இடைவெளி விட்டும் விடாமலும்
இன்ப முத்தங்கள் ..
உன்முத்தத்தினை மஞ்சளாய் பூசி
முத்தமழையில் குளிக்கின்றேன்
உன் முத்தத்தால் தானே
என் தாகம் தீர்க்கின்றேன் ..
முத்தத்தால் எனை மூர்ச்சையாக்கி
என் மூச்சை நிறுத்திவிடு ..
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/06/2011 02:06:00 PM
|
by யசோதா காந்த்
( வலையும் தொலைபேசியும் வேண்டாமே )
சொல்ல வந்த கதைகளை
சொல்லி முடித்தேன் கடிதத்தில்
மெல்லமாய் எச்சில் தொட்டு
செல்லமாய் ஒட்டினேன் தபால் தலையை
என் எச்சில் நனைத்து ஒட்டிய கடிதத்தை
நீரும் எச்சில் துணையோடு தான் பிரிப்பீரோ ??
நேரில் பகரும் முத்தத்தை இருவரும்
கடிதத்தில் பரிமாறிக்கொண்டோமோ ?..
தபால் காரன் வரும் வழி பார்த்து
தவம் கிடக்கிறதே கண்கள் இரண்டும்
பதில் கடிதம் வரும்வரைக்கும்
வேலைகள் எல்லாம் வீணாக கிடக்கிறதே
கடிதம் கண்ணில் கண்ட பின் தான்
மனமும் சொல் பேச்சு கேட்கிறதே ...
கடிதம் சொல்லும் வரிகள் எல்லாம்
என் காதில் உமது குரலாய் ஒலிக்கிறதே ..
கொஞ்சலும் மிஞ்சலும் தொடர்கிறதே
வஞ்சி நான் உம்பதிலை வாசித்தபின்பும் ..
இரவெல்லாம் உறக்கம் வரும் வரைக்கும்
கடிதத்துடன் அல்லவா கதை சொல்கிறேன் ...
கடிதமும் என் கதை கேட்பதை கண்டு
கண் அயர்ந்து உறங்கி போகிறேன் ..
விடியும் நாளை புது பொழுதில்
விவரங்களை சொல்ல
விரிவாய் மற்றொரு கடிதம் எழுத
மனதில் எண்ண அலைகள்
எழுர்ச்சி கொண்டு அடிக்கிறதே ..
தொடரும் இந்த தபால் உறவுகள்
துடிப்புடன் நன்றாய் தொடரட்டுமே ..
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/03/2011 09:21:00 PM
|
by யசோதா காந்த்
விவசாயி வீட்டிலோ
இறைவனுக்கு படையலிட்டும்
நேர்ச்சைகள் பல நேர்ந்தும்
வேண்டினான் மழை பொழிய .....
வழியோரத்திலோ
நாளிதழ்களை படுக்கையாக்கி
கிழிந்த கோணிப்பைகளை
போர்வையாக்கி
உறங்க காத்திருக்கும் ஏழையோ
இறைவனை வேண்டினான்
மழை பெய்யக்கூடாதென்று....
இறைவனுக்கும் குழப்பம்
.
~ அன்புடன் யசோதா ~
10/03/2011 12:23:00 PM
|
by யசோதா காந்த்
வங்கியில் பணமெடுத்து
வரும் வழியில்
எதேச்சையாய்
ஒவ்வொரு பணத்தினையும்
முகர்ந்து பார்த்தேன் ..
ஒன்றிலுமே வாசனை இல்லை ..
வங்கியின் வாசல் காணாத
அன்னை தரும் பணத்தில்
வாசம் மட்டும் வசமாக குடி இருந்தது ..
மல்லி ஜீரக கடுகு டப்பாக்கள் தான்
அன்னை பணத்திற்கு வங்கியாய் இருந்தது
அவள் கைகளில் புழங்கிய பணத்திற்கும்
வாசனையை விதவிதமான வாரி தந்தது ..
இன்று என் கைகளிலோ
வாசனை இல்லா
சலவைத்தாள்களாக பணம் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~
10/01/2011 12:47:00 PM
|
by யசோதா காந்த்
என்னுள் தோன்றும் எண்ணமாய்
அதை எழுதும் எழுத்தாய்
வார்த்தைகளின் வடிவமாய்
நான் படிக்கும் வேதமாய்
உன் குரல் காதில் ஒலியாய்
கண்களில் உன் முகம் ஒளியாய்
உனை பிரிந்த நேரம் முள்ளாய்
சேர்ந்த நேரமோ சொர்க்கமாய்
நடக்கையில் என் நிழலாய்
நெஞ்சினுள் எப்போதும் நினைவாய்
உன் அணுக்களால் உருவான உருவமாய்
அன்பே நீ என் ஆன்மாவாய்
ஒரே உடலுமாய் ............
ஒரே உயிருமாய் .............
உலகமே எனக்கு நீயாய் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~
9/28/2011 11:20:00 AM
|
by யசோதா காந்த்
உன் பார்வையின் அர்த்த்தங்களை
என்னவென்று சொல்வேன் .....
அழகான ஆழமான பார்வை
ஆயிரம் கதைகள் சொல்லும் அற்புத பார்வை
அன்பை அள்ளித்தரும் அமைதியின்பார்வை
பசியை மறக்க செய்யும்தாய்மையின் பார்வை
பிணி கூட பறந்தோடும்ஆரோக்கியத்தின் பார்வை
பெரியோர்களை பாசத்தால் அணை போடும் கருணையின் பார்வை
மழலைகளும் மகிழும் உன் அள்ளி அணைக்கும் பார்வை
பகைவனையும் நண்பனாக்கும் நட்பின்பார்வை
எதிரிக்கும் பயம் தரும் வீரத்தின் பார்வை
எனக்கு மட்டும் காந்தமானகாதல் பார்வை....
உந்தன் பார்வை !..
~ அன்புடன் யசோதா காந்த் ~
9/26/2011 10:11:00 PM
|
by யசோதா காந்த்
அடிக்கடி சிரித்து பேசியது தான் விளையாடும் பொம்மையுடன் அந்த அழகான குழந்தை ...
முந்தானை தலைப்பால்
முகத்தை மூடி அழும் அன்னையிடம்
வெளியில் போகலாம் என்று
கைப்பிடித்து இழுத்தது...
வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்
உறவினர்களை கண்டு
துள்ளல் நடையோடு
கொண்டாட்டமாய் குதூகளித்தது..
விபத்தில் உயிரிழந்த
தந்தையின் உடலை
நடுக்கூடத்தில்
கிடத்தி இருப்பதை அறியாத
கவலை தெரியாத
சின்னஞ்சிறு மழலை ....
~ அன்புடன் யசோதா காந்த் ~
9/23/2011 09:02:00 PM
|
by யசோதா காந்த்
வானம் ஒன்றும் தூரமில்லைஎங்கள் நெஞ்சில் சோகமில்லைசிறு புல்லும் நாங்கள் தொட்டால்கொடும் பெரும் ஆயுதமாகும்..நாளை உலகம் எங்கள் மூலம்நல்ல காலம் காண செய்வோம்புரட்சி செய்வோம் எங்கு எதிலும்எதிர்த்து நிற்போம் குற்றங்களைதாய் நாட்டைக்காப்போம் தைரியம் கொண்டுதீவிரவாதம் ஒழிப்போம் இது தாய் மீது ஆணை...இந்தியன் அனைவரும் உடன்பிறப்பென்றுஉறக்கத்தில் கூட உணர்ந்து இருப்போம்புதுமை செய்யும் இளைஞர்கள் நாங்கள்புதிய இந்தியா எங்கள் கைகளில்...
வந்தே மாதரம் ! ~ அன்புடன் யசோதா காந்த் ~
9/22/2011 12:26:00 PM
|
by யசோதா காந்த்
ஆசையாய் பெற்றெடுத்தாள்
அழகிய குழந்தை ஒன்று
கொஞ்சி மகிழ்ந்தினர் குடும்பத்தினர்
குழந்தையின் வளர்ச்சியிலோ
மாற்றங்கள் ஒன்றுமில்லை
நாட்கள் நகர நகர மெல்ல புரிந்தது
மனவளர்ச்சி இல்லா குழந்தை என்று
மருத்துவர் கூறினார்
மற்றுமொரு யோசனை
நிறைவாய் மற்றொன்று
ஆரோக்கியத்துடன் பெறலாமே என்று
தீர்க்கமாய் மறுத்தாள்
பிள்ளையை அணைத்துக்கொண்டு
இன்னுமொன்று பெற்றால்
இதை கவனிக்க தவறுவோமோ என்று…
இன்பமோ துன்பமோ
இக்குழந்தையே போதுமென்று
இறைவனிடம் மன்றாடினாள்
என் பிள்ளைக்கு அறிவையும்
நீண்ட ஆயுளையும் கொடுப்பாயா என்று !
என் கண்களில்
அவள் தாய் அல்ல ..
தெய்வத்தின் உருவமாய்
அவளே தெய்வத்தாயாய் …
~ அன்புடன் யசோதா காந்த் ~
9/18/2011 12:18:00 PM
|
by யசோதா காந்த்
இவள் ஒரு ஏமாற்றுகாரி
நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
என்னிடம் கண்ஜாடை காட்டி நிற்கிறாள்
பகலெல்லாம் முக்காடு இட்டு கொண்டு
இரவானால் மட்டும் முகம் காட்டுவாள்
சிணுங்கி மருகி தேய்கிறாள்
பின் மெல்லமாய் வளர்ந்து
ஒளிவீசி மிளிர்கிறாள் ..
என்னை ராப்பாடியாய்
ராகம் பாடவைத்து
மேகதிரையில் மறைந்து
கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடுகிறாள்
நான் மோகமாய் பார்ப்பதை கண்டு
மௌனமாய் சிரிக்கிறாள் ...
என்று தான் நானும்
நிலவு பெண்ணே ..உன்னோடு
பொன் நிலாகாலத்தில்
உலா வருவேனோ ..
~ அன்புடன் யசோதாகாந்த் ~
9/17/2011 11:35:00 AM
|
by யசோதா காந்த்
கண் மூடி கிடந்தேன்
கண்டேன் ஒரு புது உலகம்
ஜொலிக்கும் ஒரு பெரும் நகரம்
அங்கே ஜாதி இல்லை
ஏற்ற தாழ்வு இல்லை
ஆட்டி படைக்கும் அதிகார வர்க்கம் இல்லை
அங்கே எல்லோரும் மன்னர்கள்
மதிப்புமிக்க மனிதர்களாக
போட்டி பொறாமை இல்லை ...
அனைவருக்கும் ஒரே உணவு
ஒரே ஆடை ஒரே ஊதியம்
பெண்களெல்லாம் தேவதைகளாக
குழந்தைகளோ தேவகுமரர்களாக
ஊரெங்கும் தோரணம்
காணுமிடமெல்லாம் விழாக்கோலம்
வானத்திற்கும் பூமிக்கும்
வாசல்படியும் அழகிய ஏணிபடியும்
கண்திறக்க மனமில்லை..
கனவிலாவது இவ்வதிசயங்கள்
தொடரட்டும் என்று .......
~ அன்புடன் யசோதாகாந்த் ~
9/13/2011 05:10:00 PM
|
by யசோதா காந்த்
சுடும் பார்வையால் என்னை சுட்டவளே
கடும் சொல்லால் கலங்க செய்தவளே
நெடும் தூரம் என்னை ஓடவைத்து
தடுமாறி தடம் புரள வைத்தாயே
பெரும் குற்றம் என்ன என்னிடத்தில் ?
காதலிப்பது குற்றம் என்றால்
இவ்வுலகில் காதலே குற்றமடி ..
உன் பார்வை தணியாதோ
உன் பூவிதழ் திறந்து காதலை சொல்வாயோ
மெல்ல மெல்ல உறிஞ்சும் என் உயிரை
ஒரேயடியாய் பறித்து விடு என் செல்லமே ..
உன் கையால் சாவென்பதும்
மகிழ்ச்சியடி எனக்கு ......
அன்புடன் யசோதா காந்த்
9/11/2011 10:24:00 PM
|
by யசோதா காந்த்
நம் பாரதநாட்டின்
முதுகெலும்பாம் விவசாயி
இன்று அவனுக்கும் வேலையில்லா திண்டாட்டம்..
விவசாயிகள் அதிகமானதால் அல்ல ..
விவசாயம் இல்லாமல் போனதால்
செழிப்பாய் இருந்த கிராமங்களும்
இன்று நகரமாய் மாறும் முயற்சியில்
காடுகள் வெட்டி சமமாக்கி
வயல்வெளிகளை தரிசாக்கி
தரிசாக்கிய நிலங்களை காசாக்கி
விவசாயத்தை அழிக்க துடிக்கும் மக்கள்
ஆதரவாய் அரசாங்கமும் ..
இன்றோ காடு கரைகளும் வயல்வெளிகளும்
அடுக்கமாடிகளாய் கடைவீதிகளாய்..
துரிதமாய் சாகும் விவசாயம்
துடிதுடித்து குழியில் விழும் விவசாயியும்
இன்றே சேமித்து வைத்து விட்டேன்
எனது கணனியில் ..
வயல்வெளிகளையும் பயிர்வகைகளையும்
புகைப்படங்களாய்
அரிசி செடி எதுவென கேட்கும்
எதிர்கால என் தலைமுறைகளுக்காய்
~ அன்புடன் யசோதா காந்த் ~
9/08/2011 12:47:00 PM
|
by யசோதா காந்த்
மலைகளில் தெரியும் மந்தாரம்
சிலைகளில் தெரியும் மௌனம்
பேசும்போது விழும் வார்த்தைகள்
பேசாத போது விழுங்கும் உணர்ச்சிகள்
வளர்ந்து ஒளி வீசும் பிறை அழகு
தேய்ந்து மறைந்த நிலவழகு
பல் முளைக்கா மழலை சிரிப்பு
பல் போன முதுமை நகைப்பு
விழிகளில் காணும் காட்சிகள்
மொழிகளில் காணும் இனிமைகள்
வானுயர்ந்த நீண்ட மரங்கள்
குறுகிய புல் பூண்டுகள்
குளிர் நடுங்கும் பனி காலம்
கோடை தரும் கொதிப்பு
ஆறறிவு மனிதனும்
ஐந்தறிவு ஜீவன்களும்
இறைவன் படைப்பில் ...காணும்
எல்லாம் அழகே ...
~ அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~
9/05/2011 01:30:00 PM
|
by யசோதா காந்த்
விட்டு கொடுக்கும் எண்ணம்
எள்ளளவும் இல்லையே என்னிடம்
பிடிவாதம் ஒன்றே...தொடரும்
தொடர்கதையாய் ..
பேசி தீர்க்கும் விஷயத்திற்கெல்லாம்
பேசாமல் இருந்து பெரிதாக்கி ..
நான் தொலைத்த உறவுகள்
மீண்டும் கிடைக்குமோ ?
கொஞ்சி மகிழ்ந்த ,
ஆறாம் வகுப்புதோழி
எனக்காய் அழுத .
எட்டாம் வகுப்பு கமலா
எதையும் எனகாய் செய்யும்
கல்லூரி நட்பு மீனா
இன்னும் எத்தனை எத்தனை
நடப்புக்களை நான் இழந்தேன்
பாழாய் போன ஈகோ வந்திராவிட்டால் ....
இன்று இருப்பார்ள் என் அருகே
என் உயிர் தோழிகள் ..
பாழும் ஈகோ நட்பிடம் கூட
விலை பேசி நிற்கிறதே ...
இன்றுவரை எனக்குள் ........
~ அன்புடன் யசோதா காந்த்~
8/29/2011 06:58:00 PM
|
by யசோதா காந்த்
ஒன்றாம் வகுப்பில் கிடைத்த சிலேட்டு
இரண்டாம் வகுப்பில் தொலைத்த பென்சில்
மூன்றாம் வகுப்பில் கிடைத்த நோட் புக்
நான்காம் வகுப்பில் தொலைத்த பேனா
ஐந்தாம் வகுப்பில் கிடைத்த ஜாமன்ட்றி பாக்ஸ்
ஆறாம் வகுப்பில் தொலைத்த கட்டுரை நோட்
ஏழாம் வகுப்பில் கிடைத்த லீடர் பதவி
எட்டாம் வகுப்பில் தொலைத்த புது வாட்ச்
ஒன்பதாம் வகுப்பில் கிடைத்த உயிர் தோழி
பத்தாம் வகுப்பில் தொலைத்த ஹால் டிக்கட்
பதினொன்னாம் வகுப்பில் கிடைத்த லவ் லெட்டர்
பனிரெண்டாம் வகுப்பில் தொலைத்த பள்ளி வாழ்க்கை
கல்லூரி போன பின்பும் ஞாபகத்தில்..
கல்யாணம் ஆன பின்போ
கிடைத்ததையும் தொலைத்ததையும்
தொலைந்து போய் தேடுகிறேன்
இன்று வரை...
~ அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~
8/26/2011 05:45:00 PM
|
by யசோதா காந்த்
வாலிபத்தின் கடைசி நாட்களாய்
கடந்தவைகளை திருப்பிப்பார்க்கும் தருணமாய்
ஊன்றுகோலே மூன்றாம் காலாய்
பகைவனை கூட நண்பன் ஆக்கும் பக்குவமாய்
மனம் தெளிந்த நீரோடையாய்
நல்லவைகள் மட்டும் நாடும் குணமாய்
ஆசைகளை துறந்து ஞானியாய்
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடாய்
அன்பு மட்டுமே தாரக மந்திரமாய்
ஆதரவை நாடும் அப்பாவியாய்
இறைவனடி சேரும் நாளை எண்ணி தவிப்பாய்
மழலை மனதின் மொத்த உருவமாய்
வயோதிகம் .....
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/25/2011 11:52:00 AM
|
by யசோதா காந்த்
இது ஒரு கனவு தொழிற்சாலை அதிர்ஷ்டம் இருப்பவர் அரங்கேருவர் இல்லாதவரோ அங்கலாய்ப்பார் நட்சத்திரங்களுக்கோ இதுவே உயிர் மூச்சு நமக்கோ இதுவே பெரும்பேச்சு ... கைக்கெட்டா தூரத்தில் கலர் வானம் அதில் மின்னும் நட்சத்திரங்களோ கலைஞர்கள் ஏற்றி விடும் ஏணிப்படிகளாய் மக்கள் ஜெயிப்பவர் ஏராளம் தோற்பவரும் தாராளம் என்றும் வெற்றி கொடி நாட்டட்டும் வாழ்த்திடுவோம் வாருங்கள் ! ... தொடரட்டும் ...தொடரும் இந்த தொடர் கதைகள் ... ~ அன்புடன் யசோதா காந்த் ~
8/24/2011 12:13:00 PM
|
by யசோதா காந்த்
என்னவன்
***********
என்னை சிந்திக்க செய்தவன்
என்னை கவி எழுத செய்தவன்
என் கவிதைகளின் கருவாய் ஆனவன்
என் மனம் அறிந்தவன்
என்னை அணு அணுவாய் ரசித்தவன்
எனக்கு முகவரி தந்தவன்
என் பெண்மையை நான் உணர செய்தவன்
என் நிழலாய் அவன்
என் நிஜமாய் அவன்
என்றும் என் துணையாய் அவன்
என் முதலாய் ....... முடிவாய்
என்றும் என்னவனாய் அவன் !..
~ அன்புடன் யசோதா காந்த் ~
8/22/2011 02:25:00 PM
|
by யசோதா காந்த்
அதிகாலை இங்கு வந்து
பவள முத்துக்களை விதைத்தது யார்?
அள்ளி பொருக்க மனம் ஆசை படுகிறதே
துள்ளி நடக்கும் பாதங்களில்
சின்னதாய் குளிர் சுகம் பரவுகிறதே ...
புல்பூண்டுகளும் ..செடிகொடிகளும்
தலை குளித்து முடித்த பின்
தலை துவட்ட மறந்தனவோ?
தலை காய்த்து விடுவான் என
வானம் நோக்கி ...நேரம் பார்த்து ...
காத்திருக்கின்றனவோ?
நானும் கண் மூடி காத்திருக்கிறேன்
கதிரவனின் கணைகளாய்
எனை அணைக்கும் காதலனை
எதிர் நோக்கி ...
~ அன்புடன் யசோதா காந்த் ~