நினைவாய் நீயே என்றும் ...

கண் பார்த்ததும் கை கோர்த்ததும் காதோரம் கதை பேசியதும் காதலால் மகிழ்ந்ததும் கடைசியில் ..தவறான புரிதலின் பேரில் நம்மில் பிரிந்ததும் .. காலம் ..பல கடந்தும் நினைவுளே ..மீதமாய் ..~அன்புடன் யசோதா காந்த் ~ ...

காயங்கள் ...

ஏனோ எனக்கு கனவுகள் வருவதே இல்லை ...உணர்வுகள் மங்கி போனதாலோ?எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஆனதாலோ?இயற்கையை ரசிக்க மறந்தேன் நண்பனையும் எதிரியையும் ஒன்றாய் காண்கிறேன் எதுவும் பிடிக்கவில்லை என்னையும் எனக்கு பிடிக்கவில்லை  கத்தியின்றி இரத்தமின்றி காயங்கள் மட்டும் என்னுளே .....~அன்புடன் யசோதா காந்த்...

கடவுள் ...

உலக அதிசயம் எல்லாம்  உன் முன்னே  தூசியாய் .. உன்னை கண்டபின்பும்  கடவுளையும் தேடுவார் உண்டோ ? மனிதனுக்கு மனிதம்  உணர்த்துபவளே .. அன்பென்ற சொல்லுக்கு அர்த்தமே .. தாய்மை தளும்பும்  அன்னையே நீ வாழ்க !!!                          ~யசோதா காந்த்&nbs...

சந்தேகம் ...

எப்படி அழிப்பேன் என்னுள் ஆணி வேராய் சந்தேகம்  பொய்யானதை மெய்யாக்கி எனை நானே சிதைத்து என்னில் அன்பு செய்வோரையும் சுடும் சொல்லால் வதைத்து கற்பனை குதிரையை கண்மூடித்தனமாய்  ஓடவிட்டு இல்லாதொன்றை இருப்பதாக்கி இன்ப வாழ்க்கையில் இன்னல்களை சொந்தமாக்கி சின்னாபின்னாமாக்கும் இப்பிணி குணமாகுமோ என்னிலிருந்து?உயிராய் எனை நேசிக்கும் மனமும் வெறுப்பாய் மாற செய்யுதே மீளா குழிதனிலிருந்து மீள்வேனோ     என்னிலை நீளுமோ     விடை தெரியா இந்நிலை ...   ~யசோதா காந்த்...

புரியாத புதிராய் ...

புரியாத புதிராய் என்னுள் பதிந்தாய் புயலென என்னை புரட்டிப் போட்டாய் கலையாத   கனவாய் மனதில் நின்றாய் சின்ன சின்ன சிணுங்கல்களோடு சண்டைகள் தொடர்ந்தாய்மின்னலை போலே மின்னி மறைந்தாய் உயிரோடு கலந்தவனே என் உண்மை நிலை நீ அறியாயோ ?நம் நெருக்கத்தின் நாட்களை நம் பிரிவின் நொடிகள் கொன்றுபோட்டதேநான் துவளும் நிலை நீ தெரிந்தாயோ ?நீயும் என் நிலை தானோ ?நிலை அறியாது துடிக்கிறேன் என் அன்பே வினாக்கள் பல என்னில் .....பதில் கூறாயோ எனை சேராயோ என் உயிரே ...~அன்புடன் யசோதா காந்த்...

கண்மணியே ....

கண்மணியே ... நாலு வரியில் . நறுக்கென உனக்காய் கவிதை  எழுத முயன்றும் தினம் தினம் தோற்கிறேன் .. கவிதையாய் எழுத தொடங்கி கட்டுரையாய் அல்லவா முடிக்கிறேன் எனதன்பே .. எழுதி முடியா வார்த்தைகளாய் நீ என்றும் என்னில் .. ~அன்புடன் யசோதா  காந்த்~ ...

சிநேகிதியே .....

சினேகிதியே.. உன்னோடு என் நாட்கள் ' எத்தனை தித்திப்பாய்.. என் இரவுகளில் பூ மெத்தையே படுக்கையாய் .. உன்னை பிரிந்த நாள் முதல்  'நெரிஞ்சிமுள் மெத்தை மேல் என் உறக்கம்  அன்றோ காற்றுக்கும் பொறாமையடி நம்மில் இடைவெளி இல்லையென  இன்று பூக்களுக்கும் பரிதாபம்  'நம்முள் இலையுதிர்   காலம் என்று .. என்று வரும் நமக்கு மற்றுமொரு  வசந்த காலம் ஏக்கத்துடன் உன்னவன் .. ~அன்புடன் யசோதா காந்த் ~&nb...

தாய்மை ,,எங்குதான் இல்லை ??????

தாயே  உன்னைப்போல் யாருண்டு  உள்ளம் பூரித்து வாழ்த்துகிறேன்  ஐந்தறிவோ ஆறறிவோ தாய்மை ஒன்றல்லவோ  அவள் எண்ணங்களும்  ஒன்றல்லவோ ... சேயின் பசி தீர்த்து  தானும் மகிழ்ந்திடுவாள்  ~அன்புடன் யசோதா காந்த்...

தெய்வம் ...

தாய் பசுவின் மடி அது  மானிடன் கைவசம் ஆதலால்  பால் இன்றி தவித்த  பாவம் கன்று அதற்கு பாய்ந்து வந்து பசி ஆற்றினாள் பாவை அவள்  தாய்மையின் தவிப்பில் ... பெண்ணல்ல அவள்  தெய்வம் என கண்டேன் ~அன்புடன் யசோதா காந்த் ~&nb...

வர்ண ஜாலம் ..

வளைந்தும் நிமிர்ந்து நிற்கிறாள்  தன் வண்ணங்களால்  சிறிது நேர தோற்றமெனினும் நினைவிலோ நீண்டதாய்  வளைவினால் வானத்தை வளைக்கிறாள்  வர்ணங்களால் ஜாலம் காட்டி  வான வேடிக்கை காட்டுகிறாள்  தன் அழகால் அவள்  நம் இதயத்தை சுருட்டி அல்லவா செல்கிறாள்  ~அன்புடன் யசோதா காந்த~&nb...

குறையில்லை ....

விழிகளிலோ முழு நிறைவு  எதுவுமில்லை குறைவு  அன்னை அவள் தோள் ஆதரவில்  உலகையே (அன்பில் )ஆளுவேன் ஆணவத்தில்  தாய் அவள் கைகளில் இருந்தால்  வேறெதுவும் தேவை இல்லையே .... ~அன்புடன் யசோதா காந்த்...

அழகே ...

இயற்கை எழில் கொஞ்சும்  இந்த வனம் இந்த அழகு  இந்த தனிமை  இந்த இனிமை  இதமாய் உன்னோடு  இனிதாய் வேண்டும்  இனியவனே என்றும் எப்பொழுதும்  ~அன்புடன் யசோதா காந்த்...

புல்வெளி ....

சில்லென்று வீசும் காற்று சத்தமின்றி சொன்னது என் காதில் உன்னவன் கார் மேகமாய் மாறி உன்னில் மழை பொழிவான் என்று காத்திருந்த நானோ கண்மூடி அனுபவித்தேன் பூமிதனில் புல்வெளியாய் நான் படுத்துறங்க நீ தரும் நீர் துளியால் மெல்ல மெல்ல நனைந்து ஈர ஆடை உடுத்தி நான் மேனியெங்கும் நீ தழுவ குளிரிலும் முத்து முத்தாய் வேர்வைபோல் என் உடலில் பனிதுளியாய் நீ ... ~அன்புடன் யசோதா காந்த் ...

தவமின்றி கிடைத்த வரமே ,,,

என் அன்பு தோழா கண்டதில்லை உன்போல் ஓர் ஆண்மகனை நல்லவர் போல் நய வஞ்சகம் பேசும் சில கயவர்களுக்கிடையே நல்ல மனம் படைத்த தூய துணை நீயடா உள்ளொன்றும், புறமொன்றும் பேசி புறச்சொல்லால் புகைந்த மனம் கொண்டவர் மத்தியில் உண்மை உரைத்து என்னிடம் உயர்ந்து நின்றாயடா போகப்பொருளாய் பெண்ணைக்காணமல் அன்னையாய் , சோதரியாய், பிள்ளை மொழி பேசும் மகளாய் கண்டு நட்புக்கு பெருமை சேர்த்தாய் நட்பே, நல்முத்தே நான் காணும் என் சொத்தே தவமாமின்றி கிடைந்த வரம் நீ இறை தவத்தால் மட்டும் வரம் கிடைக்கும் என யார் சொன்னார் நட்புதவத்தால் வரமாய் நீ...

என்னில் நீ உலகமனாய்...

பத்திரிக்கை, கணனி, அரசியல், பொருளாதாரம் வாழ்க்கையின் வரவு செலவும் சின்ன, சின்ன கதைகள் பேசி குழப்பத்தால் வரும் சில குறைகளையும் சொல்லி கூடவே என் குடும்ப நலன் பேசி அடுக்களை முதல் அலுவலகம் வரை இன்றைய நாளின் முடிவையும் நாளைய நாளின் தொடக்கமும் பரிவோடு பரிமாறிக்கொள்கிறேன் என் தோழா, உன்னால் நானும் என் செல்லிடபேசியும் ஓட்டி பிறந்த இரட்டையராய் இணைந்து போனோம் உறவுகளில் உயர்ந்தவனே என் தோழா உறவுகளால் நிறைந்தவனே உன்னால் நான் உருவமானேன் என்னில் நீ உலகமனாய்... ~அன்புடன் யசோதா காந்த்...

புதிய சமுதாயம் படைப்போம் என்று உறுதிமொழி எடுப்போம் ....

அன்னையர் தினம் ..நண்பர்களுக்குள்ளே வாழ்த்துக்கள் பரிமாறி ...தாயின் பெருமைகளை வாழ்த்திகொண்டும் ...கவிதைகள் பல புனைந்தும் .ஆனந்தமாக அனைவரும் இருந்த பொழுதோ ..நண்பர் ஒருவரின் ..கேள்வி ..மனதை கலங்க செய்தது ,,,பெண் என்பவள் ..அன்னையாகவும் ..சகோதிரியகவும் ..தோழியாகவும் ..காதலியாகவும் ..மகளாகவும் ,,,இன்னும் பல வித பாத்திரங்களில் தனது கடமையை செவ்வனே செய்கிறாள் ஆனால் மாமியார் எனும்  பாத்திரம் மட்டும் ...தன் கடைமைகளை சரிவர செய்யாமல் ...கேள்விக்குறியாகவே இருக்கிறதே என்று கூறினார் ....சிந்தியுங்கள் அன்பு தோழிகளே...

உயிரிலே கலந்து .....

என் உயிரே எந்தன் அழகே நம்மக்குள் உள்ள காதலை வடித்தேன் ஓர் கவிதையாய் ... இமையாக நீ இருக்க  இமைக்காமல் ரசிக்கின்றேன்  சுமையாக நான் இருந்தும்  சுவையாக சுமக்கிறாயே ...பதுமையாக நீ இருக்க  புதுமையாக பார்க்கிறேன்  பனிதுளியாய் நீ இருக்க  பரவசமாய் ரசிக்கிறேன்  துயிலாமல் நீ இருக்க  துடிப்போடு அணைக்கிறேன்  துணையாக நீ இருக்க  தொலைதூரம் பறக்கின்றேன் ... மழையாய் நீ இருக்க  உனக்குள் குளிர் காய்கின்றேன்  அனலாய் நீ அணைக்க  உன்னில் குளிர்கின்றேன் ....எந்தன்...

ஒற்றையடிப்பாதை ....

உன்னோடு நான் இருவழி பயணமாய் அதில்  தனிமையில் தவிப்போடு நான்  இன்பத்தில் கைகோர்த்து  துன்பத்தில் விழி நீர் கோர்த்தும்  ஒற்றையிலோ ... மரங்கள் தலையாட்டும் சப்தமும்  கூ கூ என கூவும் குயில் ஒன்றும்  கீ கீ என கொஞ்சும் கிளி ஒன்றும்  ஒற்றை பாதையிலும் ஓர் பாதையாய்  நேர்கோட்டில் செல்லும் எறும்புகளும்  என்னோடு துணையாய் ... ~அன்புடன் யசோதா காந்த்...

நிலவாய் அவள் ...

அழகிய நிலவு என் வானில் நீ  அன்பான கனவு என் இரவுகளில் நீ  இன்பமான தொடக்கம் என் விடியலில் நீ  என் பொழுதுகள் நகரும் பொன் நிமிடங்கள் நீ  அனைத்து இன்பங்களின் ஆதாரம் நீ  என் வீட்டின் வெளிச்சம் நீ  என் நாடி நரம்புகளின் நாதம் நீ  என் உயிரின் உயிரோட்டம் நீ  எனதெல்லாம் நீயே நீயே !!! ~அன்புடன் யசோதா காந்த்...

நட்பு ...

எல்லை இல்லா வனத்தில் உயரே உயரே பறக்கிறேன் கள்ளமில்லா சிரிப்பினை கனவினிலும் கூட சிந்துகிறேன் அன்பு எனும் அடைமொழியால் அணையா விளக்காய் எரிகிறேன் ஆண்  பெண் என்ற பாகுபாடின்றி அன்பின் நட்புக்களினால் மிளிர்கிறேன் இறைவன் அருளிய  நட்பு உறவுகளை கற்பென காத்து போற்றிடுவேன் ~அன்புடன் யசோதா காந்த்...

குரங்கு ...மனம் ...

மனம் ஒரு குரங்காய் மரம் விட்டு மரம் தாவி இருக்கும் இடம் நில்லாமல் இல்லாதோர் ஒரு  இடம் தேடி பறக்க நினைக்கும் பறவை போல் இறகுகள் இன்றி உயர பறந்தே முடியாத பாதைகளில் முக்கி  முனங்கி நடைபோட தெரிந்த விடைகளையும் துருவி துருவி கேள்வி கேட்டும் போதுமென்ற நிறைவு இன்றி பொருளுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு நடக்காத ஒன்றை நடக்காதோ என்றெண்ணி எட்டா கனி என்றறிந்தும் நிம்மதி இழந்து தவிக்கும் மனம் ஒரு குரங்கு அன்றோ .... ~அன்புடன் யசோதா காந்த்~&nb...

அறிவுரை ...

 மூத்தோர் சொல்கேட்ப்போம் முக்கனிகளாய் இனிப்போம் முழுமையாய் பயனடைவோம் ஆன்றோர்களின் அறிவுரைகளோ அறிவில் சிறக்க செய்திடுமே ஆக்கம் பலபல  உருவாகுமே ! அறியா  வினாக்களுக்கெல்லாம் பெரியோர்களன்றோ அகராதியாம் இயற்கை வைத்தியங்களும் இயற்கை  சீற்றங்களையும் வியக்கும் வண்ணம் எடுத்துரைப்பாரன்றோ  ! வாழ்கையின் ரகசியங்களையும் வகை அறிந்து உணர்த்திடுவாரன்றோ !முதியோர் இல்லங்கள் ஒழியட்டும் அவர் நம் அன்பு பிணைப்பில் வாழட்டும் முதியோர்களை போற்றுவோம் முரண்பாடுகள் இன்றி வாழ்ந்திடுவோம் ~அன்புடன் யசோதா...

நாணம்..

   சுமைகளை தாங்கி தாங்கியே பழகிப்போனது மனது  காலங்கள் பல கடந்தும்  நிமிர மறு(மறந்)த்தது முதுகு நிலம் பார்த்து நடக்கின்றேன்  இன்றும் நாணத்தைவிடாமல் ... ~அன்புடன் யசோதா காந்த் ~ ...

முத்து மாமா ...,,,

முந்திரி தோப்பில் முந்தானைய இழுத்த என் முத்து மாமா உன் முத்து சிரிப்பில் முற்றும் தொலைத்தேன் என் செல்ல மாமா உன் அக்கா மகள் என் அன்பு உனக்குத்தான் முத்து மாமா நீ கள்ள தனமாய் கண்டு ரசிப்பது ஏன் என் தங்க மாமா கோயில் குளம்  வேண்டி நிக்கிறேன் என் முத்து மாமா நீ வேண்டாதனம்  செய்ய துடிப்பதேன் என் கண்ணு மாமா ஜாதி சனம் முன் உன் தாலிக்காய் தலை குனிவேன் என் முத்துமாமா நீ தன்னந்தனியாய் நின்னு தவிப்பதேன் என் சின்ன மாமா வைகாசி மாசம் பந்தல் போடணும் என் முத்து மாமா நீ வேலி அடைத்து வெள்ளாமை ...

இறைவா தூக்கம் கொடு .....

இறைவா தூக்கம் கொடு .. பணமே சிந்தனையாகி                  தூக்கமின்மை ஆரோக்கியம் நலன் கருதி                 தூக்கமின்மை உறவுகளின் பிரிவுகளால்                   தூக்கமின்மை மனம் நிறைந்த மகிழ்ச்சியால்                 ...

பள்ளிக்கூடம் ....

இவளும் நம் தாயல்லவா தாயவள் கருவறையில் நமக்கு உருவம் கொடுபாள் பள்ளிக்கூட   வகுப்பறையோ நம் வாழ்வுக்கு வழி திறப்பாள் குயவனின் கைபட்ட களிமண்ணோ சிறப்புமிக்க  பொருளாகும் பள்ளிகூடமோ நம்மைமாண்புமிகு மனிதர்களாக்கும் மனிதனை   மனிதனாக்குவதும் பள்ளிக்கூடமே பட்டங்களும் பதவிகளும் தந்து சரித்திரம்  படைக்க வைக்குமே அறிவு எனும் கண்ணைதிறந்துகல்விதரும் பள்ளிக்கூடமும் நமது கருவறையே .. ~அன்புடன் யசோதா காந்த் ~ ...

பொக்கிஷம் ...

.. எழுதுவதும் வாசிப்பதும் கிழித்து எறிவதும் தொடர்கதையாய் மனதின் தேடல் கிடைப்பதுவரை காகித துண்டுகள் மலைபோல் குவியலாய் மனைவிக்கு கோபம் வீட்டை சுத்தம் செய்தே ஓய்ந்து விடவே குழந்தைகளும் எச்சரித்தன எனை குப்பைபோடாதீர்கள் என என் ஊனமுற்ற கவிதைகள் அவர்களுக்கோ வெறும் குப்பையாய் இனி நானோ .. ஆரோக்கியமான கவிதைகள் வரும் வரை சேமிக்க தொடங்கினேன் குறையாய் பிறந்த என் கவிதை குழந்தைகளை குப்பையாக்காமல் பொக்கிஷங்களாய்.. ~அன்புடன் யசோதா காந்த்...

வலி .....

நாட்களும் நொடிகளும்  நகர மறுப்பதேன் ? உண்ணாமல் ...நீர் அருந்தாமல் இருந்தும் பசிப்பதில்லையே  ஏன் ? உறவெல்லாம் உடன் இருந்தும் தனிமை என்னை தழுவியதேன்? இதய துடிப்பு சீராய் இருந்தும் உடலும் மனமும் உயிரற்று இருப்பதேன்? வாழ்க்கையில் மற்ற ஒன்றிலும் தேடல் இல்லையே ஏன்? கத்தியின்றி காயம்இன்றி வலிகள் ஏன்? காதலெனும் நோயினால் உடலும் மனமும் உருக்குலைந்து போவதேன் ? பெரும் பிணிக்கெல்லாம் தீர்வு உண்டே காதல் நோய்க்கு மருந்து இல்லையே  ஏன் ? ஏன் ஏன் ஏன் என்று மனம் மருகி உருகி தவிப்பதேன் ? ~அன்புடன் யசோதா...

காதலர் தினம் ....

பூக்களும் காதல் பரிசுகளும் குவிந்து கிடக்க வாழ்த்துவோரும் வழங்குவோரும் குழுமி இருக்க நாகரீக காதலரோ ஆடி பாட கிராமத்து காதலரோ திரை அரங்கு கோயில்குளம் தேட புதிதாய் பூத்த காதலரோ தவி தவிக்க காதலில் வெற்றி கண்டவரோ பெருமை கதை பேச காதல் தோல்வி கொண்டவரோ பார்க்கும் ஜோடிகளை வசை பாட இனிதே தொடரட்டும் இனிய காதலர் தினங்கள் இன்புற வாழட்டும் உண்மை காதலர்கள் ~அன்புடன் யசோதா காந்த்...

அன்னை போல நீயும் .....

அன்பே என் தாயின் அணைப்பை உன்னில் உணர்ந்தேனே தாய் அவள் தவிப்பை உன்னில் அறிந்தேனே அன்னை அவள் பரிவை உன்னில் கண்டேனே அன்பான  அவள் கொஞ்சல்களை உன்னிடம் அனுபவித்தேனே அன்னை அவள் பொய் கோபம் உன்னிடமும் அப்படியே பாசமிகுதியால் சின்னசின்ன சண்டை நம்மிலும் நடக்கிறதே என் அன்பு காதலா நீயும் என் தாயின் சாயலே உன் மடிமீது தலைவைத்து நானும் சிறு குழந்தை போலானேனே `அன்புடன் யசோதா காந்த்...

அன்புள்ள அம்மாவுக்கு ....

அம்மா உன்னை பார்க்க ஆசை காதலின் வேகத்தில்உன்னை மறந்தேனே நானே தாயானபோதோ தவறுகளை உணர்ந்தேனே என்னை விழிக்குள் வைத்தல்லவா நீ வளர்த்தாய் எனக்கு பிடித்த உணவுகளையல்லவாபார்த்து பார்த்து சமைத்தாய் ஒரு நிமிடம் உன்னை மறந்து என்னவர் பின் நடந்தேனே உன்னை பிரிந்த பின்னும் ஒவ்வொரு நொடியும் என் நினைவே நீயானாயே உந்தன் வலியை எந்தன் மகபேறு தன்னில் உணர்ந்தேனே மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா நீ வேண்டும் அம்மா மீண்டும் எனக்கு நான் குழந்தையாய் மாறி உன் புடவை தலைப்பால் முகம் மறைத்து விளையாட நீ தலை தடவ உன்...

சொல்மனமே சொல் ...

சொல்மனமே சொல் நடப்பவை  யாவும் நன்மைக்கே  என்று அச்சம் என்று எதுவும் இல்லை தோல்விகள் கண்டு துவளுவதும் இல்லை துயரங்களில் தோய்ந்து போவதும் இல்லை எதிர் காலம் கருதி கலங்குவதும் இல்லை மரணம் விரைவில் வரும் என தெரிந்தாலும் எக்காலத்திலும் எந்த நேரத்திலும் சரியோ .. தவறோ எதுவாயினும் சொல் மனமே சொல் நடப்பவை யாவும் நன்மைக்கே  என்று  ~`அன்புடன் யசோதா காந்த்...

சாதி ....

ஆதியில் சாதி இருந்ததோ ? மேல் மக்கள்  கீழ் மக்கள் உண்டோ ? ஆண் பெண் இருபாலர்  அல்லவா? அன்பென்ற தாய் பெற்ற பிள்ளைகள் அனைத்தும் ஓர் குலம் அன்றோ ? இறந்த உடல்கள் அனைத்தும் பிணம்எனும் ஒற்றை பெயர்தானே ? அறுத்தெறிவோம் ஜாதி எனும் ஆணி வேரை பாரதி கண்ட கனவு பாரதத்தில்  பலிகட்டுமே உறுதி எடுப்போம் தீண்டாமை இனி இல்லை என்று .. அறிவில்லாதோர் காட்டும் இரட்டை குவளை முறை அழிப்போம் சாதி என்ற பெயரில்  அடிமைத்தனம் ஆள்வோரை ஒழிப்போம் வாழ்க பாரத அன்னை வளர்க நம் பாரதம் .. ~அன்புடன் யசோதா காந்த்...

கனவுகளே .....

இரவுகள் தோறும் எண்ணிலா   கனவுகள் ... புரியாத இன்பம் தரும் கனவுகள் அறியாத துக்கம் தரும் கனவுகள் மோகினி பேய்களுடன் கைகோர்க்கும் திகில் கனவுகள் பகைமை உணர்த்தும் பழிக்குப் பழி கனவுகள் காதலை அள்ளி தெளிக்கும் காதலான கனவுகள் உணர்வுகளை தூண்டும்  காம கனவுகள் பொன்னும் பொருளும் கண்டு மயங்கும் ஆசை கனவுகள் பாம்பும் தேளும் ஊரும்  கோர கனவுகள் பிரிந்த சொந்தங்கள் சேரும் பாச கனவுகள் ஏதேதோ முகமுடி இட்ட வேசகனவுகள் குழந்தையாய் மனம் மகிழும் அற்புதகனவுகள் உயிர் போகும் வலியுள்ள மரணகனவுகள் விடிந்ததும் ... மாறாமல்...

பூங்காற்று ...

வல்லரசுகள் இரண்டும்    மோதிகொண்டும் கூட்டணி சேர்ந்துகொண்டும் இடியும் மின்னலும் இல்லறத்திலேயே வீட்டில் ஒளி தரும் தீபங்களோ நிம்மதி  விளக்கினை அணைக்கும் முயற்சியிலே அடக்கும் முயற்சியில் மாமியார்களும் சுதந்திரம் பேசிக்கொண்டே மருமகள்களும் தன் இளமை பருவம் மறந்த பெரியவர்கள் தன் தாயின் முதுமையை  மறந்த சிறியவர்கள் தலைமுறை தலைமுறையாய் தொடரும் குடும்ப பூகம்பங்கள் மகளாய் மருமகளையும் தாயாய் மாமியாரையும் எண்ணும் இல்லத்திலே என்றும்  வீசுமே மணமுள்ள பூங்காற்று ... ~ அன்புடன் யசோதா காந்த்...

காதலான காதலன் ..

காதலில் உயிரானவன்   உலகிற்கு உயர்வானவன் சுற்றி இருப்போர்க்கு உறவானவன் தித்திக்கும் தேனாய் இனிப்பவன் ஊருக்கு உதவுபவன் என்னில் நிழலானவன் தன்னில் பாதி எனக்கு தந்தவன் நீதி நெறி தெரிந்தவன் என் நெஞ்சம் நிறைந்தவன் தஞ்சம் என வந்தோர்க்கு தயை செய்பவன் அநீதிக்கு குரல் கொடுப்பவன் அழகில் ஆணழகன் உன்னை நான் அடைய என்ன வரம் பெற்றேனோ    ~ அன்புடன் யசோதா  காந்த் ~ &nb...

தமிழன் ....

உலகெங்கும் கொடிகட்டி பறப்பவன் தமிழன் ஊர் எல்லையில் ஆதரவின்றி கிடப்பவனும் தமிழன் தீமையை  கண்டு குரல் கொடுப்பவன் தமிழன் கொடுமைகள் கண்டும் கண் மூடிகொள்பவனும் தமிழன் தலை நிமிர்ந்து நடை போடுபவன் தமிழன் குட்ட குட்ட குனிந்து தளர்பவனும்  தமிழன் புதுமைகள் பல படைப்பவன் தமிழன் பழமையில் ஊறி திளைப்பவனும் தமிழன் பாகுபாடின்றி சமபந்தி உண்பவன்  தமிழன் ஜாதி வெறியில் இரத்தம் சிந்துபவனும் தமிழன் அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தமிழன் இரக்கமற்ற சிலசெயல்கள் புரிபவனும் தமிழன் எங்கும் தமிழ் எதிலும் தமிழென குரல்...

வெளிச்சம் ...

தெருவோர குருட்டு பெண்ணிடம் முறைகேடாய் நயவஞ்சகன் .. தறிகெட்ட அச்செயலால் நிறைகுடமாய் முன் வயிறு .. இருந்தும் அவளுக்குள் ஆனந்தம் இனி கை பிடித்து தன்னை நடத்தி செல்ல உலகின் வெளிச்சம் தனக்கு தந்திட தொப்புள் கொடி உறவு வருமென்று மகப்பேருக்காய் காத்திருந்தாள் மங்கை  அவள் .. கறுப்பு வெள்ளை கனவுகளோடு ~அன்புடன் யசோதா காந்த்...

ஆசைக்கு அழிவில்லை ...

ஆசைக்கு அழிவில்லை ... ஆசைகளும் அடங்குவதில்லை ஆசைகள் வேண்டும் நம் மனதிலே அவை வாழ்கையை உயர்த்தும் உயர்வுகளிலே ஆசைகள் வளர்ப்போம் இயன்றவரை அது  ஈடேறும் நாள் வரும்வரையே ஏணி படிகள் இன்றி ஏற்றங்கள் தொடலாம் தயக்கமின்றி  தடைகளும்  தாண்டலாம் ஆசை ஒன்றே ஆக்கத்திற்கு காரணம் ஆசையில்லா மனிதனும் அரை  மனிதனே ~`அன்புடன் யசோதா காந்த்...

விழிகளே ....

எனது விழிகளே .... பலமுறை வேண்டியும் பயனில்லை உங்களிடம் மனதின் மர்மங்களை அம்பலபடுத்தும் ஆயுதங்களே அடிமைபோல் கேட்கிறேன் உணர்ச்சிகளை மறைத்து கொள்ளுங்களேன் காதல் தோல்வியால் துவண்டதையும்கவலைகள் என்னை கலக்கியதையும்பயம் எனும் பேய் பாடாய் படுத்தியதையும்   பிரிவுகள் பல வந்து பித்தாய் அலைந்ததையும்  யாரும் அறியாது உள்ளுக்குள் உருகுவதையும் விழிகள் நீங்கள்  அறிவிப்பதேனோ ?   வலிகள் பலவகை  வருவினும் விழிநீர் வடிக்காதீர்கள் விசும்பலுடன் விண்ணபிக்கிறேன் எனது விழிகளே ... ~அன்புடன்...

திருமண நாள் ...

இன்று ஏனோ புதிதாய் கவிதைகள் ஒன்றும் வரைய வில்லை என் திருமண நாள் என்பதாலோ மனம் பின்னோக்கி பறந்தது என் வாலிப வயதும் என் கணவரை காதலித்ததும் காதலில் நாங்கள் மகிழ்ந்ததும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்ய துணிந்ததும் என்னவரின் உறவினர்கள் கலந்து ஆலோசித்தபின் ஊரறிய திருமணம் ஆனதும் எல்லாம் நேற்று நடந்தது போல் ஓடிவிட்டது .. முத்தான பதினேழு வருடங்கள் அழகாய் இரண்டு குழந்தை செல்வங்களும் நன்றி இறைவா நாளும் நான் மறவேன் வணங்குகிறேன் வாழ்த்துங்கள் ... ~அன்புடன் யசோதா காந்த்...

பிரியாத வரம் ...

இணைந்து நாம்  வாழ்ந்ததோ முத்தான முப்பது வருடங்கள் எனக்கு அவரும் அவருக்கு நானும்  அன்பாய் எல்லநேரங்களிலும் ஆதரவாய் இணைபிரியா  நாட்கள் மனைவி சொல்  கேட்டோ மகனோ பிரித்துவிட்டான் வெவ்வேறு முதியோர் இல்லங்களில் இனி என்று சேர்வோமோ   ? ஏக்கத்துடன் என் மனம்  மரணத்தை நோக்கி .. ~`அன்புடன் யசோதா காந்த்...

என் உயிர் நண்பனே ...

நண்பனே உன்னை வணங்குகிறேன் நாளும் நீ வாழ வாழ்த்திடுவேன்  அந்நிய அரபு தேசத்திலே அடிமை வாழ்வினிடையேஅறிமுகமானேன் உன்னுடனே ... அறியா மொழி பேசுவோர் நடுவினிலே தாய் மொழியாம் தமிழ் மொழி நம்மை சேர்த்ததே என்ன தவம் நான் செய்தேனோ உன்னை தோழனாய்  அடைந்ததிலே உன் அருகாமை  என்னில் கிடைத்ததிலே உலகே என் கைகளில் என உணர்ந்தேனே என் இன்ப  துன்ப வேளையினிலே நீ என் தெய்வம் என்றுணர்ந்தேனே என்று தீர்ப்பேனோ இக்கடனை நட்புக்கோர் இலக்கணமானாயே வாயால் சொல்லி தீராதே நீ செய்த நன்மைகளே காவியம் படைக்க முயல்கின்றேன் கருணை...